Published:Updated:

மீ டு சர்ச்சையின்போது நான் பேசாததற்கு இதுதான் காரணம்! - பாடகர் கார்த்திக் விளக்கம் #Metoo

மீ டு சர்ச்சையின்போது நான் பேசாததற்கு இதுதான் காரணம்! - பாடகர் கார்த்திக் விளக்கம் #Metoo
மீ டு சர்ச்சையின்போது நான் பேசாததற்கு இதுதான் காரணம்! - பாடகர் கார்த்திக் விளக்கம் #Metoo

மீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதில் ரியாக்ட் செய்திருந்தார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும் எந்தப் பதிலும் சொல்லாமலே இருந்துவந்தார்.  தொடர்ந்து அவரிடம் பேசுவதற்கு முயன்றபோதும்கூட, 'கொஞ்சம் பர்சனல் வேலை இருக்கு மேம். ப்ளீஸ், நானே உங்களுக்கு போன் பண்ணட்டுமா?' என்று கேட்டதால், அவரை அதற்கு மேல் நாமும் தொல்லைபண்ண விரும்பவில்லை.  இந்த நிலையில், கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து, முதல் முறையாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,  மீ டூ பற்றிய தன்னுடைய கருத்தையும், தன்மீதான குற்றச்சாட்டுக்கு பதிலையும் தெரிவித்திருந்தார்.

அதில், 'சமீப காலமாக ட்விட்டரில் என்னைப் பற்றி அநாமதேய புகார்கள் சொல்லப்படுகின்றன. கடந்த காலத்தில், என்னுடைய நடத்தையால் யாராவது மனம் வருந்தியிருந்தால், அவர்கள் என்னை நேரடியாக அணுகுங்கள். என்மீது தவறு இருக்கும்பட்சத்தில், அதற்காக நான் மன்னிப்பு கேட்கவும் தயார். அதற்கான விளைவுகளை, அது சட்டரீதியான நடவடிக்கை என்றாலும் அதற்கு உட்படவும் நான் தயாராகவே இருக்கிறேன்' என்று எழுதியிருந்தார்.  மறுபடியும் கார்த்திக்கு போன் செய்தோம். இந்த முறை பேசினார். 

''என் மேல குற்றச்சாட்டு வந்தப்போ, நான் பேசாததற்குக் காரணம், அப்போ எங்கப்பா உடம்பு சரியில்லாம இருந்தார்.  அந்த நேரத்துல, என் மனசு முழுக்க எங்கப்பா பத்தின கவலைகள்தான் இருந்துச்சு. அதனால்தான் அமைதியா இருந்துட்டேன். இப்போ, அந்த ஹெல்த் பிரச்னைகளில் இருந்து கிட்டத்தட்ட  வெளியே வந்துட்டார்.  அதனாலதான், தெளிவான மனசோட அந்த ட்விட்டை போட்டேன். அடுத்த வாரம் அப்பாவுக்கு சின்னதா ஒரு அறுவைசிகிச்சை செய்றதா இருக்காங்க. இப்பகூட, அதுக்கான தேதியை ஃபிக்ஸ் பண்ணத்தான் டாக்டரை பார்க்க போயிட்டிருக்கேன். கடவுள் புண்ணியத்துல அந்த ஆபரேஷனுக்கு அப்புறம், அப்பா பழையபடி நார்மலாயிடுவார். அதுக்காக நீங்களும் கடவுளை வேண்டிக்கோங்க'' என்று தழுதழுத்தவர், 'மீ டூ' புகார் குறித்து சொல்லும்போது, ''என்னுடைய புரொபஷனே, நான் பாடி மத்தவங்களை சந்தோஷமா  வெச்சிருக்கிறதுதான். என் மனசாட்சிக்குத் தெரிஞ்சவரைக்கும், நான் அப்படி எதுவும் தப்பா நடந்துக்கலைங்க'' என்கிறார்.