பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

facebook.com/ஜெ.வி. பிரவீன்குமார்

“நொடி” என உச்சரிக்கும் நேரத்தில் அந்த நொடி கடந்துவிடுகிறது என எழுதினேன். கவிதைபோலவே இருந்தது. பதற்றத்தில் அழித்துவிட்டேன்.

வலைபாயுதே

twitter.com/Kozhiyaar

பார்க்கவே முடியாதுன்னு நினைத்த ‘Black Hole’ஐக்கூடப் பார்த்தாச்சு, ஆனா கண்டு பிடித்து எடுக்கிறேன்னு சொன்ன ‘Black Money’ஐத்தான் கண்ல காட்ட மாட்டேங் கிறாங்க!

twitter.com/saravananucfc

Uncle பாதி Single பாதி கலந்து செய்த கலவைதான் 90’s kids.

 twitter.com/gips_twitz

“வைகை ஆற்றை கங்கை நதி போல் சுத்தமாக்க நினைக்கிறேன்” - மோடி

மக்கள்: “அப்போ கங்கை நதியைச் சுத்தமாக்கிட்டீங்களா?”

மோடி: “இல்லை. அதையும் சுத்தமாக்கணும்னு நெனச்சேன்”
 
twitter.com/SettuOfficial

என்னது ஜெயிச்சிட்டமா! அப்படினா நாம எல்லா மேட்சும் பஞ்சாப் கூடவே வெச்சிக்குவோம்டா.

twitter.com/Akku_Twitz

“நடிகன் என்பதால் மக்களிடம் கண்களாலேயே பேசினேன்”- கமல். நீங்க வாய்ல பேசுனாலே புரியாது. இதுல கண்ணுல வேறயா? 

வலைபாயுதே

twitter.com/Anandh_Offl

மனைவி, கணவன் இருக்கும் இடத்துக்கு வர்றதுக்கு முன்னாடியே உஷாரா இருக்கிறதுக்குத்தான் எவனோ கொலுசைக் கண்டு பிடிச்சிருப்பான்.

facebook.com/gkarlmax

உண்மையைச் சொன்னா, ராகுல் காந்தி பேசவே வேண்டாம். யாரு வேணா அதைத் தமிழ்ல சொல்லலாம். அந்தளவுக்கு அவரோட கன்டென்ட் ஆறு மாசமா நமக்குப் பழகியிருக்கு.

twitter.com/nandhu_twitts

திருமண ஆசை இருப்பவர்களுக்கு இழுத்தடித்தும், திருமண ஆசையே இல்லாதவர்களுக்கு வலுக்கட்டாய மாகவும் அமையும்..!

 twitter.com/AlaTwitz

இந்துங்கறாங்க

தேசம்ங்கறாங்க

ராணுவம்ங்கறாங்க

காவலன்ங்கறாங்க

ஆனா இந்த 5 வருசமா என்ன செஞ்சோம்ங்கறத மட்டும் சொல் லவே மாட்டேங்கறாங்க. செஞ்சி ருந்தாதான் சொல்லுவாங்களே?

facebook.com/dextermorgan9192

மழை.. காபி.. ராஜா சார்ன்னு ஸ்டேட்டஸ் போடுற எலைட்டு கும்பல் பூரா பயலுக்கும் ‘தென்றல் வந்து தீண்டும் போது’, ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ ‘ராஜ ராஜ சோழன் நான்’ தாண்டி வேறெந்த இளையராஜா பாட்டும் தெரியாது.. இவனுங்க ஒரு ‘அரண் மனைக் கிளி’ பாட்டோ, இல்ல ‘அம்மன் கோயில் கிழக்காலே’ பாட்டோ மருந்துக்கும்கூட கேக்க மாட்டானுங்க..  நான்லாம் இப்பவும ‘அன்னக்கிளி’ பாட்டு கேக்குறவன்டா...

twitter.com/thoatta

நேத்து பூத்துக்குள்ள யாரு இருப்பாங்கன்னு சீனைப் போட்டாப்ல, இன்னைக்கு பூத் பூத்துன்னு அழுகறாப்ல #மாற்றம் முன்னேற்றம் அழுகைமணி 

twitter.com/Arunkum61188707


கருணாநிதி மட்டும் காமராஜராக, கக்கனாக இருந்தால் ஏது எம்ஜிஆர்,  ஏது ஜெயலலிதா?- சீமான்.

அப்ப காமராஜர் இருந்தப்ப கருணாநிதி ஏன் வந்தார் அப்படின்னு கூட்டத்துல ஒருத்தன் கூட கேட்கலைங்க.

twitter.com/BoopatyMurugesh

தீபாம்மா தேர்தலில் போட்டியிடாதது ஒரு ராஜதந்திரம்தான். என்னா வெயில்டா சாமி!

சைபர் ஸ்பைடர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு