தமிழ் சினிமாவின் லவ்வர் பாய் மற்றும் ட்ரீம் கேர்ள் யார்..!? #ValentineSurveyResult | Lover boy and Dream girl survey result

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (20/02/2019)

கடைசி தொடர்பு:19:20 (20/02/2019)

தமிழ் சினிமாவின் லவ்வர் பாய் மற்றும் ட்ரீம் கேர்ள் யார்..!? #ValentineSurveyResult

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் சினிமாவின் லவ்வர் பாய் மற்றும் ட்ரீம் கேர்ள் யார் என்பதற்கான சர்வே நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஆனந்த விகடன் புத்தகத்தில் வெளியாகும். இந்த ஆண்டு அந்த சர்வே ஆன்லைனில் நடத்தப்பட்டது. தமிழ் சினிமாவின் டாப் 10 சிங்கிள்களையும், டாப் 10 ஹீரோயின்களையும் வைத்து நடத்தப்பட்ட இந்த சர்வேயில், பலர் தங்களது கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள். அதன் முடிவுகள் இதோ...

லவ்வர் பாய் & ட்ரீம் கேர்ள்

லவ்வர் பாய்:

`அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் பல பெண்களின் மனதைக் கொள்ளை கொண்ட விஜய் தேவரகொண்டாதான், இந்த ஆண்டின் லவ்வர் பாய் லிஸிட்டில் முதல் இடத்தில் இருக்கிறார். `அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ஹிட்டைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா எந்தப் படத்தில் நடித்தாலும் அதைக் கொண்டாட ஒரு குரூப்பே கிளம்பி விட்டது. இரண்டாவது இடத்தில் அதர்வா இருக்கிறார். அதர்வாதான் சென்ற ஆண்டின் லவ்வர் பாய் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தில் ஹரிஷ் கல்யாண் இருக்கிறார். பிக் பாஸ் கொடுத்த மிகப் பெரிய ஆதரவும் `பியார் பிரேமா காதல்’ படத்தின் ஹிட்டும்தான் இவரின் இந்த ரீச்சிற்கான காரணம். நான்காவது இடத்தில் கெளதம் கார்த்திக்கும் ஐந்தாவது இடத்தில் ஆரவ்வும் இருக்கிறார்கள்.

ட்ரீம் கேர்ள்:

மாரியை ரெளடி பேபியாக்கிய சாய் பல்லவிதான் பல இளைஞர்களின் செல்ல பேபி. ஆமாம், பல வாக்குகள் பெற்று இவரே இந்த ஆண்டின் ட்ரீம் கேர்ளாக நிற்கிறார். பிக் பாஸ் மூலம் புகழின் உச்சம் சென்ற ஓவியா, இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் மூன்றாவது இடத்திலும், கீர்த்தி சுரேஷ் நான்காவது இடத்திலும், ஐஸ்வர்யா ராஜேஷ் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
 


[X] Close

[X] Close