'டோன்ட் வொரி... பொன் மாணிக்கவேல் சார்ஜ் எடுக்கிறாரு!' - பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல் டீசர் | Pon Manickavel - Official Teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 19:38 (20/02/2019)

கடைசி தொடர்பு:19:38 (20/02/2019)

'டோன்ட் வொரி... பொன் மாணிக்கவேல் சார்ஜ் எடுக்கிறாரு!' - பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல் டீசர்

பிரபுதேவா நடிப்பில் ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கியிருக்கும் 'பொன் மாணிக்கவேல்' படத்தின் டீசர் ரிலீஸானது. 

 பிரபு தேவா

பிரபுதேவா, தன் உதவி இயக்குநர் ஏ.சி.முகில் இயக்கத்தில், `பொன் மாணிக்கவேல்' என்ற படத்தில் நடித்துவருகிறார். `போக்கிரி', `வெடி' படங்களில் போலீஸ் கதையை இயக்கியிருந்தாலும், தன் 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்துக்கு `பொன் மாணிக்கவேல்' என்று பெயர் இருப்பதால், சிலை கடத்தல் தடுப்புத் துறை ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் கதையா எனப் பரவலாகப் பேசப்பட்டுவந்தது. 

பொன் மாணிக்கவேல்

தற்போது, 'தேவி -2', 'யங் மங் சங்', 'தேள்' உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் பிரபு தேவாவுக்கு ஜோடியாக, இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இயக்குநர் மகேந்திரன், இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க, சுரேஷ் மேனன் வில்லனாக நடிக்கிறார். 'விஸ்வாசம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்திற்கு இசையமைக்கிறார் இமான்.  'டிக் டிக் டிக் ' படத்துக்குப் பின்னர் ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.     

 

 


[X] Close

[X] Close