'வர்மா' படத்துக்குப் பதிலா பணம் செலவுபண்ணி புது வெர்ஷன் எடுக்குறது பெரிய விஷயம் - ப்ரியா ஆனந்த்  | Actress priya anand says about that 'aadhithiya varma' movie

வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (20/02/2019)

கடைசி தொடர்பு:09:50 (21/02/2019)

'வர்மா' படத்துக்குப் பதிலா பணம் செலவுபண்ணி புது வெர்ஷன் எடுக்குறது பெரிய விஷயம் - ப்ரியா ஆனந்த் 

விக்ரமின் மகன் துருவ் விகர்ம் நடிக்கவிருக்கும்' ஆதித்யா வர்மா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது.  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்க இருக்கிறார்.

ஆதித்யா வர்மா

இந்தப் படவாய்ப்பு அமைந்தது குறித்து அவரிடம் பேசினோம். ``மலையாளத்தில் வெளியான 'Ezra' படம் எனக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது. அதுவும் இந்தப் படத்துல இடம்பெற்ற 'Lailakame' வீடியோ பாடல் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இது எல்லாத்துக்கும் காரணம், இந்தப் படத்தைத் தயாரித்த 'E4  என்டர்டெயின்மென்ட்' நிறுவனம்'' என்று மகிழ்ச்சியாக பேச்சைத் தொடங்கினார் நடிகை ப்ரியா ஆனந்த். 

ப்ரியா ஆனந்த்

``இந்த நிறுவனம்தான் `ஆதித்யா வர்மா' படத்தையும் தயாரிக்க இருக்கிறது. முதலில் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து என்னிடம் பேசுனாங்க. என்னோட ரோல் பிடித்திருந்தது. அதனால, ஓகே சொல்லிட்டேன். முக்கியமா, அர்ஜுன் ரெட்டி படம் எனக்குப் பிடிக்கும். அந்தப் படத்துக்கு நானும் ஃபேன். தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இல்லாம உலக சினிமா ரசிகர்கள் பலரையும் இந்தப் படம் கவர்ந்திருக்கு. இதை தமிழில் ரீமேக் செய்யப்போறாங்கன்னு தெரிஞ்சவுடனே சந்தோஷப்பட்டேன். முக்கியமா 'வர்மா' படத்துக்குப் பிறகுகூட ஒரு தயாரிப்பு நிறுவனம் எங்களுக்குப் பணம் செலவு ஆனாலும் பரவாயில்லை. படத்தோட ஒரிஜினல் ஃபீல் கிடைக்கணும்னு அதைத் திரும்பவும் எடுக்கிறது பெரிய விஷயம்.  இந்தப் படத்தோட ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனுடன் ஏற்கெனவே ஒரு விளம்பரப் படத்துல வேலை பார்த்திருக்கேன். அவருடைய ஒளிப்பதிவுல நடிக்கிறது சந்தோஷம். 'ஆதித்யா வர்மா' படத்தோட இயக்குநர் கிரிசய்யாவுடனும் பேசினேன். அவருடன் வேலை பார்ப்பதில் மகிழ்ச்சி’ என்றார் மகிழ்ச்சியுடன்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close