`புதிய வடிவில் தமிழ்த் தாய் வாழ்த்து!’ - எல்.கே.ஜி படத்தின் தமிழ் ஆன்தம் | LKG film's 4th track tamil anthem sung by lead singers released

வெளியிடப்பட்ட நேரம்: 21:52 (20/02/2019)

கடைசி தொடர்பு:21:52 (20/02/2019)

`புதிய வடிவில் தமிழ்த் தாய் வாழ்த்து!’ - எல்.கே.ஜி படத்தின் தமிழ் ஆன்தம்

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு எல்.கே.ஜி படத்தின் நான்காவது பாடலான `தமிழ் ஆன்தம்’ இன்று வெளியிடப்பட்டது.

ஆர்ஜே பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் `எல்.கே.ஜி'. நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் நையாண்டிப் படமாக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதுமுக இயக்குநர் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் மூலம் பிரபல அரசியல் பேச்சாளர் `நாஞ்சில்' சம்பத் அறிமுகமாகிறார். படம், நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கு சென்னை ரோகிணி திரையரங்கில் அதிகாலை 5 மணிக்கு, காட்சிக் கிடைத்திருப்பது குறித்து பாலாஜி மற்றும் விஷ்ணு விஷாலுக்கு இடையே காரசாரமான விவாதம் நடந்தது. பின்னர் அது சுமுகமாக முடிந்தது. அதைத் தொடர்ந்து எல்.கே.ஜி படக்குழு முன்னாள் முதல்வர்களின் சமாதிகளுக்குச் சென்று மரியாதை செலுத்தினர். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கோப்பை இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் செய்திருக்கிறார் .   

ஆர்.ஜே. பாலாஜி

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு எல்.கே.ஜி படத்தின் நான்காவது பாடல் `தமிழ் ஆன்தம்' இன்று வெளியிடப்பட்டது. `உயிரே உன்னைத் தமிழ் என்பதா?' என்ற பழம்பெரும் பாடகிகள் பி சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, வாணி ஜெயராம் ஆகியோருடன் சின்மயி மற்றும் `கண்ணான கண்ணே' பாடல் புகழ் சித் ஶ்ரீராம் ஆகியோர் பாடியிருக்கும் பாடலைப் பாடலாசிரியர் பா.விஜய் எழுதியுள்ளார்.

லியோன் ஜேம்ஸ்

பாரம்பர்யமாகப் பாடப்பட்டு வரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் இப்பாடலில் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. இப்பாடல் சமூக வலைதளங்களில் வெகுவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.        

 

 

 


[X] Close

[X] Close