பிரீமியம் ஸ்டோரி

• ‘தர்பார்’ படத்துக்கு ஸ்கிரிப்ட் முடிக்கும் முன்னரே, த்ரிஷா நடிக்கும் ஒரு படத்துக்குக் கதை எழுதிக் கொடுத்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். இப்படத்தை ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன் இயக்கவுள்ளார். இசை அனிருத் என்கிறது கோலிவுட். தன் பிறந்தநாளுக்காக வெளிநாடு செல்லவுள்ள த்ரிஷா, இந்தியா திரும்பியபின், இப்படத்திற்கென தற்காப்புக்கலைப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார். இங்கேயே... இப்போதே!

இன்பாக்ஸ்

• தனது எமோஜி எக்ஸ்ப்ரஷன்ஸ் மூலம் இன்டர்நெட் வைரல் ஆனவர்  பிரியா பிரகாஷ் வாரியர். சமீபத்தில் ஒரு விளம்பரத்துக் காகத் தன் உதவியாளர் அனுப்பிய மெசேஜை அப்படியே  இன்ஸ்டாவில் பதிவிட்டார். அதில் ‘Text content for Instagram and Facebook’  என்று அவர்கள் அனுப்பியதை அப்படியே போஸ்ட் செய்துவிட, ரசிகர்கள் ‘என்னம்மா இது!’ என்று கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள்! பணம் காப்பி பேஸ்ட்டும் செய்யும்!

• ரேபரேலியில் சோனியா மனுத்தாக்கல் செய்யும்போது பிரியங்கா, ராபர்ட் வதேரா, பிரியங்காவின்  மகன் ரைஹான் வதேரா எனக் குடும்பமாக வந்திருந்தது,  அப்பகுதி மக்களை உணர்ச்சிமயமாக்கியிருக்கிறது. இரண்டு தசாப்தங்களாக சோனியாவைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராக எண்ணிக்கொண்டிருக்கும் ரேபரேலி மக்களுக்கு, இது நெகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்னொரு வாரிசு ரெடி!

இன்பாக்ஸ்

• ‘அர்ஜுன் ரெட்டி’ படம் இந்தியில் ‘கபீர் சிங்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் ஷாஹித் கபூர் ஹீரோவாக நடித்துள்ளார். புகைபிடிக்கும் காட்சிகள் அதிகமாக இருந்ததால், ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகள் வரை பிடிக்க நேர்ந்துள்ளது. வீட்டில் மனைவி, குழந்தைகளுக்கு பயந்து வீட்டிற்குச் செல்லும் முன்பே தனது வேனிட்டி வேனிலேயே இரண்டு மணிநேரம் குளித்துவிட்டுதான் சென்றிருக்கிறார் ஷாஹித். சுவரை எழுப்புவோம்!

• ஏ. ஆர். ரஹ்மான்  தனது இசைப்பயணத்தை மெருகேற்றிக்கொண்டே செல்கிறார். திரைப்படங்களுக்கு இசை மட்டுமல்லாமல் இயக்கத்திலும் ஆர்வம் செலுத்தி ‘லே மஸ்க்’ என்ற படத்தை இயக்கினார்.  தற்போது அவர் ‘99 சாங்ஸ்’  என்ற ரொமான்டிக் மியூசிக்கல் படத்தை எழுதி, தனது ஒய்.எம் மூவீஸ் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார். விளம்பர மற்றும் வெப் சீரிஸ்களை இயக்கியுள்ள விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்குகிறார். எல்லாப் புகழும்...

• கியூபாவைச் சேர்ந்த ஹிட் ஹாட் பாடகி, கமிலா கபெலோ. 22 வயதே ஆன இவர் எழுதிப் பாடிய ஆல்பங்கள் இளசுகள் மத்தியில் செம வைரல். 2019 கிராமி அவார்ட்ஸில் சோலோ பாப் ஆல்பத்துக்காக விருது பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நூலிழையில் விருது மிஸ்ஸானது. தற்போது சோனி நிறுவனத்தால் தயாரிக்கப்படவுள்ள ‘சின்ட்ரெல்லா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கமிலா.  இதனால், சோகத்திலிருந்த கமிலா ஆர்மி தற்போது உற்சாகமடைந்துள்ளது. கம் ஆன் கமிலா..!

இன்பாக்ஸ்

• ஒற்றைப் பெண்ணின் புகைப்படம் சூடானில் தற்போது அரசுக்கு எதிராக நிகழ்ந்துகொண்டிருக்கும் எதிர்ப்புக்கு அடையாளமாகியிருக்கிறது. பொறியியல் படித்துவரும் 22 வயது அலா சலா எனும் அவர், கூட்டத்திற்கு நடுவே வாகனம் ஒன்றின் மீதேறி, தனது ஆட்காட்டி விரலை தீரத்துடன் உயர்த்தி நிற்கிறார். அந்நாட்டின் பாரம்பர்ய உடைகளில் ஒன்றான வெள்ளை நிற ஆடையும், கோல்டு மூன் என்னும் காதணியும் அணிந்து அதிகாரத்துக்கு எதிராக, புரட்சிப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் அலா சலா. “என்னுடைய புகைப்படம் வெளியானதில் மகிழ்ச்சி. சூடானில் அதிகாரத்திற்கு எதிராக நடந்துவரும் புரட்சியைப் பற்றி இந்த உலகம் அறியட்டும்” என்று பேசியிருக்கிறார் அலா சலா.  ரியல் ஒரு விரல் புரட்சி!  

• உலகின் முன்னணித் திரைப்பட விழாக்களில் ஒன்று ‘கான்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்.’ சர்வதேச அளவில்  இயக்குநர்களின் பெரும் கனவாய் இருக்கும் இந்தத் திரைப்பட விழா, இந்த ஆண்டு மே 14-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் முதல் படமாக அமெரிக்காவின் ‘The Dead Don’t Die’ என்ற படம் திரையிடப்படவுள்ளது.  ஸோம்பி நகைச்சுவைப் படமான இதில் பில் முரே, செலினா கோம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ்ல 2021-ல பார்க்கலாம்.

இன்பாக்ஸ்

• லாஸ் ஏஞ்சல்ஸின் ஹாலிவுட் பகுதியில் அமைந்துள்ளது க்ரவ்மேன்ஸ் ஈஜிப்தியன் திரையரங்கம். ஹாலிவுட்டின் இதயம் என வர்ணிக்கப்படும் இத்திரையரங்கம் 1922-ல் தொடங்கப்பட்டது. தற்போது இந்தத் திரையரங்கை நெட்பிளிக்ஸ் நிறுவனம், படப்பிடிப்பு மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக வாங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பழையன கழிதலும்...

• ஹாலிவுட் பிரபலம் கிம் கார்தஷியன், சமீபத்தில் அமெரிக்கப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் 4 ஆண்டு குற்றவியல் வழக்கறிஞர் பயிற்சியில் இணைந்துள்ளதைத் தெரியப்படுத்தியிருக்கிறார். ‘‘அமெரிக்காவில் சிஸ்டம் சரியில்லை. 2022-ல் தேர்வு எழுதி கிரிமினல் லாயராக மாறப்போகிறேன்’’ என்றிருக்கிறார் கிம். அங்கேயுமா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு