Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

ந்த வாரம் மிஸ்டர் மியாவ் சொல்லும் வாவ் தகவல்கள், நடிகை ஆண்ட்ரியாவைப் பற்றி!

•  ஆங்கிலோ இந்தியன் பெண்ணான ஆண்ட்ரியா, ரோமன் கத்தோலிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பிறந்தது அரக்கோணம். தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில்தான் முடித்தார், ஆண்ட்ரியா.
 

• கெளதம் வாசுதேவ் மேனனின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பாகவே, லைலா மற்றும் பிரசன்னா நடிப்பில் வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் சிறிய கேரக்டர் ஒன்றில் நடித்திருந்தார், ஆண்ட்ரியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமலினி முகர்ஜிக்குத் தமிழில் டப்பிங் பேசியவர், ஆண்ட்ரியாதான். தவிர, ஹாரிஸ் இசையில் அந்தப் படத்தில் ‘கற்க கற்க’ பாடலையும் பாடினார். 

• ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் சிம்ரன், ஷோபனா, தபு உள்ளிட்ட நடிகைகளை நடிக்கவைக்க முயற்சி செய்தார், கெளதம் மேனன். சில காரணங்களால் அவர்களது கால்ஷீட் கிடைக்காமல் போகவே, ஆண்ட்ரியா ஹீரோயின் ஆனார். அதற்குப் பிறகு ஆண்ட்ரியா தொட்ட உச்சம் வேற லெவல்.

• பள்ளியில் படிக்கும்போது மனநல மருத்துவராக வேண்டும் என்பது ஆண்ட்ரியாவின் கனவு. அது முடியாமல் போகவே, பின்னாளில் மாடலாக, பாடகியாக, நடிகையாக ஜொலித்தார். தனது சொந்த மியூசிக் ஆல்பத்தை வெளியிட முடியவில்லையே என்ற வருத்தம் ஆண்ட்ரியாவுக்கு உண்டு. 

• பல படங்களில் ஆண்ட்ரியா நடித்திருந்தாலும், அவற்றில் அவருக்கு மிகவும் பிடித்தப் படங்கள்... மலையாளத்தில் ‘அன்னையும் ரசூலும்’, தமிழில் ‘தரமணி’. இரண்டையும் அடிக்கடி பார்ப்பதும் ஆண்ட்ரியாவின் பொழுதுபோக்குகளில் ஒன்று.

மிஸ்டர் மியாவ்

• கமலினி முகர்ஜி தவிர டாப்ஸி, இலியானா, எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகைகளுக்கும் தமிழில் குரல் கொடுத்திருக்கிறார் ஆண்ட்ரியா. சமீபத்தில் ‘Avengers: Endgame’ படத்தில் ‘Scarlett Johansson’ குரலுக்குச் சொந்தக்காரர், ஆண்ட்ரியாதான்.

• தமன்னாவும் இவரும் இணைந்து நடித்த தெலுங்குப் படமான ‘தடகா’ செம ஹிட்! டயட் ஃபாலோ செய்வதில் தீவிரமாக இருக்கும் இந்த இருவரும் ஒரே தேதியில் பிறந்தவர்கள் என்பது ஆச்சர்யம்!
 

• தஞ்சாவூரில் கண் மருத்துவமனை ஒன்றைத் திறந்து வைத்த ஆண்ட்ரியா, கண் தானமும் செய்திருக்கிறார்.

 ம்யூட்

மிஸ்டர் மியாவ்

இரு முன்னணி நடிகைகளைக் காதலித்து, காதல் தோல்வி அடைந்த வாரிசு நடிகரை பிக் பாஸ் ‘ஜில்’ நடிகை தற்போது காதலிக்கிறாராம். ‘எப்படியாவது நடிகரைக் காதல் வலையில் விழவைக்கிறேன்’ எனத் தோழிகளிடம் சொல்லியிருக்கிறாராம், நடிகை.

• அரசியலில் பிஸியாக இருக்கும் நடிகர்மீது கடுப்பில் இருக்கிறாராம் கண் மை நடிகை. இருவரும் இணையும் படத்துக்காக தனது கால்ஷீட்டைக் காம்ப்ரமைஸ் செய்து தேதிகளை ஒதுக்கிக் கொடுத்தாராம், நடிகை. ஆனால், நடிகரால் படப்பிடிப்பு தள்ளிப்போவதால், வந்த வாய்ப்புகளை விட்ட வருத்தத்தில் இருக்கிறார் நடிகை.

• உச்ச நடிகரின் படத்தில் நடித்துவரும் நம்பர் நடிகை, தனது காதலர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் உச்ச நடிகரை நடிக்க வைக்கும் முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். ‘பிழைக்கத் தெரிஞ்ச ஜோடி இவங்க’ எனக் கமென்ட் அடிக்கிறார்கள், கோலிவுட் பிரமுகர்கள்.