``10,000 எதிரிகளை வீழ்த்திய 21 வீரர்களின் வரலாறு!" - அக்‌ஷய் குமார் நடிக்கும் 'கேசரி' டிரெய்லர் | trailer of akshay kumar's war drama kesari is out

வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (21/02/2019)

கடைசி தொடர்பு:12:22 (21/02/2019)

``10,000 எதிரிகளை வீழ்த்திய 21 வீரர்களின் வரலாறு!" - அக்‌ஷய் குமார் நடிக்கும் 'கேசரி' டிரெய்லர்

இந்தி திரையுலகில் வித்தியாசமான படங்களைத் தருபவர்  நடிகர் அக்‌ஷய் குமார். '2.0' படத்தைத் தொடர்ந்து இந்தியில் அவர் நடித்துள்ள 'கேசரி' படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

அக்‌ஷய் குமார்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் நடந்த சரகர்ஹி போரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள 'வார் டிராமா' ஜானர் திரைப்படம் இது. 

1897-ம் ஆண்டு இந்துகுஷ் மலையருகே  இந்தப் போர் நடந்தது. போரில் 10,000 ஆப்கன் வீரர்களை எதிர்த்த பிரிட்டிஷ், இந்தியப் படையை சேர்ந்த 21 சீக்கிய வீரர்களுக்கு ஹவில்தார் இஷார் சிங் தலைமை தாங்கினார். இந்தக் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக பரினீத்தி சோப்ரா நடித்துள்ளார்.  அனுராக் சிங் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்தின் இசையை டனிஷ்க் பக்சி, ஆர்கோ ப்ரன்வ் முகர்ஜி, சிரந்தன் பட், ஜஸ்பீர் ஜஸ்ஸி , குர்மோஹ்,ஜஸ்லீன் ராயல் மற்றும் ராஜு சிங் என எட்டு இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். .      

   

 

 

 


[X] Close

[X] Close