`96 ரீமேக்ல அப்படி ஒண்ணும் சிக்கல் இல்லை!'- பிரேம் குமார் | 96 director clarifies the rumours on telugu remake

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (21/02/2019)

கடைசி தொடர்பு:18:45 (21/02/2019)

`96 ரீமேக்ல அப்படி ஒண்ணும் சிக்கல் இல்லை!'- பிரேம் குமார்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' படம் வெளிவருவதற்கு முன்பிருந்து நூறாவது நாள் வரை பல சர்ச்சைகளைச் சந்தித்துவருகிறது. தமிழில் இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு படத்தில் சமந்தா, ஷர்வானந்த் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

96 ரீமேக்

படத்தின் வெற்றிக்கு முக்கியமான  காரணிகளில் ஒன்று, இசை. படத்தின் தெலுங்கு ரீமேக்கில், தமிழ்ப் படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரை மாற்றிவிட்டு, தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரை இசையமைக்க வைக்கலாம் எனத் தயாரிப்பாளர் கூறிவருகிறார்.

பிரேம் குமார்

இதனால், 'தயாரிப்பாளர் 'தில்' ராஜு மற்றும் இயக்குநர் பிரேம் இடையே  கருத்து வித்தியாசம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் '96' படத்தின் தெலுங்கு ரீமேக் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது' எனவும் செய்திகள் வந்தன.   இதுகுறித்து இயக்குநர் பிரேம் குமாரிடம்  பேசுகையில், ``இந்தச் செய்தியை நான் இன்னும் பார்க்கல. எனக்கும் தயாரிப்பாளருக்கும் எந்தப் பிரச்னையும் இல்ல. படத்தோட இசையமைப்பாளருக்கு முன்பணம் கொடுத்து ரொம்ப நாள் ஆச்சு. படப்பிடிப்புக்குத் தேவையான லொக்கேஷன பார்க்கும் வேலைகள்ல தயாரிப்பு தரப்பு இருக்காங்க. இங்க சொல்றமாதிரி 96 ரீமேக்கில் அப்படி ஒண்ணும் சிக்கல் இல்லை" என்றார்.   


[X] Close

[X] Close