'சூப்பர் டீலக்ஸ்' இரண்டாவது போஸ்டர் வெளியீடு! - மார்ச் 29ல் படம் ரிலீஸ் | super deluxe to release on march 29

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (21/02/2019)

கடைசி தொடர்பு:18:12 (21/02/2019)

'சூப்பர் டீலக்ஸ்' இரண்டாவது போஸ்டர் வெளியீடு! - மார்ச் 29ல் படம் ரிலீஸ்

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, தியாகராஜன் குமார்ராஜா இயக்கும் படம், 'சூப்பர் டீலக்ஸ்' . தமிழ் சினிமாவில் `ஆரண்ய காண்டம்’ படத்தின்மூலம் அறிமுகமான இவர், பல தரப்பு ரசிகர்களையும்  கவர்ந்துள்ளார். தற்போது,  விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் (பக்ஸ்), காயத்ரி, விஜய் ராம் எனப் பெரிய நட்சத்திரங்களுடன் தயாராகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதியும், செகண்டு லுக்கும் இன்று வெளியிடப்பட்டது. 

சூப்பர் டீலக்ஸ்

நான்கு கதைகளைக்கொண்ட ஆந்தாலஜியாக உருவாகியுள்ள இப்படத்துக்கு, நலன் குமாரசாமி, மிஷ்கின், நீலன் கே.சேகர் (`அலிபாபா' படத்தின் இயக்குநர்) ஆகியோர் கூடுதல்  திரைக்கதையை  எழுதியிருக்கின்றனர்.  நீரவ் ஷா மற்றும் பி.எஸ்.வினோத் ஆகியோர் ஒளிப்பதிவுசெய்துள்ளனர். ஆரண்ய காண்டத்தில் இணைந்த யுவன் சங்கர் ராஜா - குமார்ராஜா கூட்டணி இப்படத்திலும் இணைகிறது. டைலர் டர்டன் அண்டு கினோ ஃபிஸ்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகும் தியாகராஜன் குமார்ராஜா ஈஸ்ட்வெஸ்ட் ட்ரீம் ஒர்க் என்டர்டெயின்மென்ட் மற்றும் அல்கேமி விஷன் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

 வெளியாகியுள்ள இந்த செகண்ட் லுக், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. தயாரிப்பாளர் சஷிகாந்தின் 'ஒய்நாட் எக்ஸ்' நிறுவனம், படத்தை மார்ச் 29-ம் தேதி  வெளியிட உள்ளது.  


[X] Close

[X] Close