13 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மாதவன் - அனுஷ்கா! | Madhavan and Anushka reunite for a new film after 13 years

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (21/02/2019)

கடைசி தொடர்பு:20:45 (21/02/2019)

13 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மாதவன் - அனுஷ்கா!

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு மாதவன் - அனுஷ்கா ஜோடியின் நடிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. கடைசியாக 2006-ம் ஆண்டு வெளியான 'ரெண்டு' படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். சைலன்ட் படமாக இருக்கும் இது, சஸ்பென்ஸ் மர்டர் மிஸ்டரி திரில்லர் கதை ஒன்றின் அடிப்படையில் இருக்கும். கோபி மோகனுடன் இணைந்து, கதை மற்றும் திதைக்கதையை எழுதுவதோடு இணை தயாரிப்பாளராவும் பணிபுரிகிறார், கோனா வெங்கட்.

மாதவன்

இந்தப் படம்குறித்து இயக்குநர் ஹேமந்த் மதுகர் கூறும்போது, ``இந்தப் படம் நடிகர் மாதவனின் கரியரில் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதேபோல, ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு அனுஷ்காவைத் தவிர யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது" என்றார்.

ஒரு சைலன்ட் சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படத்தில், டால்பி அட்மாஸ் ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை மற்றும் மிக நேர்த்தியான காட்சியமைப்புகள் என ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் உயர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. கோபி சுந்தர் இசையமைக்க, ஷானியேல் டியோ இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், 1500 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகும் இந்தப் படத்தை காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட்ஸ், கிரண் ஸ்டூடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது.


[X] Close

[X] Close