அனிருத்தின் பியானோ இசைக்கு மயங்கும் புலி! #Thumbaa | a new promo video of anirudh with tiger released

வெளியிடப்பட்ட நேரம்: 21:14 (21/02/2019)

கடைசி தொடர்பு:21:14 (21/02/2019)

அனிருத்தின் பியானோ இசைக்கு மயங்கும் புலி! #Thumbaa

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான `கனா' படத்தில் கதை நாயகனாக நடித்தவர் தர்ஷன். இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். தவிர, `கலக்கப்போவது யாரு' தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கின்றனர்.

அனிருத்

தமிழ், தெலுங்கு, மலையாளம்,  இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு `தும்பா' எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் அனிருத் பியோனா வாசிக்க அந்த இசையை புலி ரசித்து கேட்பதுபோல காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. வீடியோ வெளியாகி சில மணி நேரங்களில் அதிக வியூஸ்களை கடந்து இணையத்தைக் கலக்கி வருகிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close