மாஸ், க்ளாஸ் எனத் தமிழ் சினிமா எத்தனையோ ஹீரோக்களைக் கண்டிருக்கிறது. அதில் அஜித் ரொம்பவே வித்தியாசமானவர். மாஸ், காசு என ஓடாமல் ‘மங்காத்தா’ பண்ணுவார், திடீரென ‘பிங்க்’கை ரீமேக் செய்வார்... என அவரின் மனதுக்குப் பட்டதை ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்ததாக மாற்றிக்கொள்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தாலே செய்தியாவது இவர் மட்டுமே. ஆனாலும் அந்தப் புகழ் வெளிச்சத்திலிருந்து தனித்திருப்பதுதான் ‘தல’க்குப் பிடித்தது. அப்படி, சமீபத்தில் ஓட்டுபோட வந்தபோதும் பெரும் பரபரப்பானது. அஜித் இப்போது என்ன செய்கிறார், அந்தத் தேர்தல் நாள் அன்று நடந்தது குறித்து அவர் என்ன நினைக்கிறார்... இவை அஜித் அப்டேட்ஸ்.

புதிதாக நவீன ரக துப்பாக்கி வாங்கியிருக்கிறார். சென்னைப் பல்லாவரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றுவருகிறார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தை எதிர்த்து வாதாடும் கேரக்டரில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். அந்த கேரக்டருக்கு அவரைப் பரிந்துரைத்ததே அஜித்தானாம். டிவியில் ரங்கராஜ் பாண்டேவின் வாதத்திறமையைப் பார்த்திருக்கும் அஜித், தனக்கெதிரான வழக்கறிஞர் கேரக்டரில் பாண்டேவை நடிக்கவைத்திருக்கிறார்.

வக்கீல் வேடத்தில் நடிப்பதால் தமிழ் உச்சரிப்பு தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சிறப்புப்பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார். தன் வழக்கறிஞரை அருகில் வைத்துக்கொண்டு நிஜ வக்கீலின் மேனரிசங்களையும் சில சட்ட நுணுக்கங்களையும் ஹோம் ஒர்க் செய்து இதில் நடித்திருக்கிறார்.

‘நேர்கொண்ட பார்வை’ பட இயக்குநர் வினோத்துக்கும் அஜித்துக்கும் சண்டை என்று வெளியான தகவல்கள் அனைத்தும் பொய். ‘சிறுத்தை’ சிவாவுக்கும் அஜித்துக்கும் எப்படி நெருக்கமான நட்போ அதுபோலவே வினோத்துக்கும் அஜித்துக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அதனால் அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் வினோத்தே இயக்குகிறார். அது ஆக்ஷன் அதிரடிப்படமாக அமையும்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கவனித்து வைத்திருப்பார். திடீரெனப் புது ஆட்கள் வந்தால்கூடக் கண்டுபிடித்துவிடுவார். ஒருமுறை ரசிகர்கள் சிலர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள்போல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், அஜித் அதைக் கண்டுபிடித்துவிட்டார்.

விளம்பரமின்றி உதவி செய்வார். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாகக் கண் அறுவைசிகிச்சை செய்ய உதவியிருக்கிறார். ‘விஸ்வாசம்’ யூனிட்டில் ஒருவர் தொடர் கண் வலியால் இரண்டு நாள்கள் வேலைக்கு வரவில்லை. அவரை, ஆபரேஷன் செய்ய உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆபரேஷன் செலவு, உடம்பு சரியாகும்வரை வீட்டுச்செலவு என அத்தனையையும் அஜித்தே பார்த்துக்கொண்டார்.

``ஏற்கெனவே ரசிகர் மன்றத்தைக் கலைத்தாகிவிட்டது, அரசியலிலும் இறங்க மாட்டேன் என்று தெளிவாக அறிக்கையும் கொடுத்தாகிவிட்டது. நான் தொழில்முறை நடிகன். என் வேலையைப் பார்க்கிறேன். ‘குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றும் ரசிகர்களிடம் சொல்லியாகிவிட்டது. இவ்வளவு எடுத்துச் சொல்லியும் பொது இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நிறைய விஷயங்கள் நடப்பதைப் பார்க்கிறேன். சமூக வலைதளங்களிலும் சிலர் வேறு நடிகர்களைத் திட்டி கமென்ட் போடுவது, ஏப்ரல் 18-ம் தேதி வாக்குச் சாவடிக்கு ஓட்டுபோட வந்தபோது கலாட்டா செய்தது ஆகியவை எனக்குப் பிடிக்கவில்லை’’ என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி ஆதங்கப்பட்டாராம் அஜித்.

-எம்.குணா