Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

twitter.com/MrElani
ஜெயசூர்யா, பான்ட்டிங் பேட்ல ஸ்பிரிங் இருக்குன்னு நம்புன குரூப், ஐபிஎல் எல்லாம் மேட்ச் ஃபிக்ஸிங்னு சொல்லி இன்னும் நடுரோட்டுல திரிஞ்சிட்டிருக்கு!

twitter.com/ItsJokker

இன்னைக்குத் தொப்பை குறையலை யேன்னு வருத்தப்படுறவன்லாம் யாரு? ஒரு காலத்துல இந்த உடம்பு ஒல்லியா இருக்கேன்னு நினைச்சு வருத்தப் பட்டவங்கதான்!

twitter.com/arattaigirl
கையாளத்தெரியாத எதுவுமே சுமைதான் #அன்பு, காதல், புகழ், கோபம், நட்பு, பொறாமை, இணையம்!

twitter.com/ImSarva36

இந்த லாரன்ஸ்கிட்ட இருந்து யாராவது பேயைக் காப்பாத்துனா நல்லா இருக்கும்!

twitter.com/tamilravi
அம்மை வருவது அம்மன் செயல் என்று ஒரு காலம் இருந்தது. இன்றைய குழந்தைகள் அதைக் கேட்டால் சிரிப்பார்கள். அறிவியல் வளர வளர மூட நம்பிக்கைகள் தானாக மறையும். கடவுள் யார் என்பதை அறிவியல் பார்த்துக் கொள்ளும். பூசாரி யார் என்பதைத்தான் நம் அரசியல் பேச வேண்டும் :)

வலைபாயுதே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

twitter.com/iam_Saranallu
தேவதைகள் திரும்பிக்கூடப் பார்க்காத கடைசி தலைமுறை 90’s கிட்ஸ்..!

twitter.com/Annaiinpillai
ஏங்க... என்னங்க என்ற வார்த்தைகளைத் தேவைக்கு ஏற்றாற்போல வாய்ஸ் மாடுலேஷன் செய்வதில் மனைவிகள் கெட்டிக்காரர்கள்!

twitter.com/shivaas_twitz
யாராவது கல்யாணப் பத்திரிகை கொடுத்தா, அதில் கல்யாணத் தேதி, இடத்தைப் பார்க்கும்முன் அவரோட சாதியைத் தேடும் சமூகத்தில்தான் நாம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!

வலைபாயுதே

twitter.com/PriyaaBM
“பத்திரமாய் வீடு சென்றடைந்ததும்
 தகவல் சொல்லு” என்னும் கரிசனை
ஆயிரம் “ஐ லவ் யூ” க்களுக்கு நிகரானது!

twitter.comTalksssTweet
நெருக்கமானவரிடம் நாம் நம்பிச் சொன்ன வார்த்தைகளை, மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில்... அவமானப்படுகிறது நம் நம்பிக்கை!

twitter.com/Kozhiyaar
திருமணமாகாத ஆண்களே, தாய் தந்தையரை ஓரளவிற்கு மேல் எதிர்த்துப் பேசாதீர்கள். அளவு மீறும் சமயத்தில் நீங்கள் திருமணத்திற்குத் தயாராகி விட்டதாக நினைத்துக்கொண்டு உங்களை மாட்டி விட்டுவிடுவார்கள்!

வலைபாயுதே

twitter.com/PriyaaBM
தன் காதலனைத் தந்தைக்கு நிகராக மதிக்கும் பெண்ணும் தன் காதலியைத் தாயைப்போல் நேசிக்கும் ஆணும் நிச்சயம் ஈர்ப்பினால் காதலிக்கத் தொடங்கியிருக்க மாட்டார்கள்!

- சைபர் ஸ்பைடர்