`தி.மு.க ஊழல் கட்சின்னு இன்னைக்குதான் தெரியுதாமா?' – கமலைக் கலாய்க்கும் சீமான் | seeman speech against rajini, kamal

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (23/02/2019)

கடைசி தொடர்பு:14:20 (23/02/2019)

`தி.மு.க ஊழல் கட்சின்னு இன்னைக்குதான் தெரியுதாமா?' – கமலைக் கலாய்க்கும் சீமான்

சீமான் கதாநாயகனாக நடிக்கிற ‘அமீரா’ படத்தின் பூஜை நேற்று சென்னை ஈக்காட்டுத்தாங்கல் முனீஸ்வரன் கோயிலில் நடைபெற்றது. படத்துக்குப் பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்ட பூஜை முடிந்ததும், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சீமான்.

சீமான்

வழக்கம்போல் அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட, சரவெடியாய் வெடிக்கத் தொடங்கினார். கமலின் அரசியல் குறித்த கேள்வி எழுந்ததும், ‘ஹே ஹே’ எனச் சிரித்தவர்.. ’கமலஹாசனுக்கு தி.மு.க ஊழல் கட்சின்னு இன்னிக்குத்தான் தெரியுதாமா? என்றார், தொடர்ந்து ரஜினியையும் விடவில்லை.

சீமான்

‘ஸ்ட்ரெய்ட்டா சி.எம். ஆகணும்னு நினைச்சு கட்சி ஆரம்பிக்கறவன் நான் இல்லை. ‘தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடுங்க’னு சொல்றீங்க சரி, அது எந்தக் கட்சிங்கிறதையும் சொல்லிடணுமில்லையா? அதுதானே தலைமைக்கு அழகு? ‘எது சரின்னு நீங்களே பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க’னு சொல்லிட்டுப் போறது என்ன மாதிரியான போக்கு?” என்றவர், இவங்கெல்லாம் பணத்துக்காக ஓடிட்டிருந்த காலத்துல நான் இனத்துக்காக ஓடினேன்’ என முடித்தார்.

தொடர்ந்து அரசியல் கேள்விகளே எழுப்பப் பட, ‘ஒரு நல்ல படத்தை தொடங்கியிருக்கேன். அதைப் பத்திப் பேசாம, வாயைப் பிடுங்கி, பிறகு ‘சீமான் அப்படிச் சொல்லிட்டார், இப்படிச் சொல்லிட்டார்னு எழுதறீங்க, அதனால போதுமே’ என பேச்சை முடித்துக்கொண்டார்.


[X] Close

[X] Close