கோயமுத்தூரில் மாபெரும் நட்சத்திர கிரிக்கெட் விழா - நடிகர் சங்கம் திட்டம்? | a grand star night to be organised by south Indian film artist association in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (23/02/2019)

கடைசி தொடர்பு:15:20 (23/02/2019)

கோயமுத்தூரில் மாபெரும் நட்சத்திர கிரிக்கெட் விழா - நடிகர் சங்கம் திட்டம்?

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டட வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. அடுத்தகட்டப் பணிகளை மேற்கொள்ள அடுத்தடுத்து நட்சத்திர கலை விழாக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது நடிகர் சங்கம்.  

மலேசிய நட்சத்திர கலை விழா

ஏற்கெனவே, கட்டட நிதிக்காக மலேசியா புக்கித் ஜாலால் விளையாட்டு மைதானத்தில் தமிழ்த் திரைப்பட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர கிரிக்கெட் போட்டி மற்றும் கால்பந்துப் போட்டி நடத்தப்பட்டது. இதில்  ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, ஜீவா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். 

கலை விழா

அதேபோல் ஒரு மாபெரும் ஸ்டார் நைட் தமிழகத்திலேயே நடத்த நடிகர் சங்க விழாக் குழு கோயமுத்தூரைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும். பிரமாண்ட மேடை, கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர கிரிக்கெட் விழா என இரண்டு நாள் விழாவாக நடத்தவுள்ளதாகவும் பேசி வருகின்றனர். திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகளுக்கென பிரத்தியேக ரயில் ஒன்றை ஏற்பாடு செய்து சென்னையிலிருந்து, கோவை செல்லவும் முடிவெடுத்துள்ளதாகவும் பேசி வருகிறார்கள். ஆரம்பக்கால இந்திய சினிமாவின் களஞ்சியமாக இருந்த கோவையில் ஒரு சினிமா விழா  நடப்பது வரவேற்கத்தக்க விஷயம். 


[X] Close

[X] Close