``தூர இருந்து உங்களை ரசிக்கிறேன் மதிக்கிறேன்!"- ரஜினி குறித்து சேரன் நெகிழ்ச்சி | cheran lauds rajinikanth's gesture during vijaykanth meet

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (23/02/2019)

கடைசி தொடர்பு:17:30 (23/02/2019)

``தூர இருந்து உங்களை ரசிக்கிறேன் மதிக்கிறேன்!"- ரஜினி குறித்து சேரன் நெகிழ்ச்சி

நேற்று நடந்த சந்திப்பில், ரஜினி விஜயகாந்த் கன்னத்தை தட்டிக் கொடுக்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது அது குறித்து சேரன் ட்விட்டரில் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது அமெரிக்க சிகிச்சை முடித்து அண்மையில் சென்னை திரும்பினார். தற்போது அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். இந்த நிலையில் சென்னையிலுள்ள அவரின் இல்லத்தில் வைத்து நண்பர்கள், முக்கிய பிரமுகர்கள் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். நேற்று ரஜினிகாந்த் விஜயகாந்த்தைச் சந்தித்தார். குடும்பத்தினரும், உறவினர்களும் மட்டுமே அந்தச் சந்திப்பில் உடன் இருந்தனர்.

விஜயகாந்த் - ரஜினிகாந்த்

அப்போது விஜயகாந்தின் உடல் நிலை, தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் குறித்து பேசியதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த  ரஜினி குறிப்பிட்டிருந்தார். விஜயகாந்த்தின் மகன்  விஜயபிரபாகரனின் அரசியல் பேச்சுகள் குறித்து சந்திப்பின்போது ரஜினி பகிர்ந்துள்ளார். இந்த நிலையில், விஜயகாந்த் ரஜினியை வழியனுப்பி வைக்க எழ அவரை ரஜினி கன்னத்தில் தட்டிக் கொடுக்கும் விடியோ வைரலாகி வருகிறது.  

சேரன்

இந்தக் காணொலி குறித்து இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ``இந்த மனிதநேயம்தான் ரஜினியிடம் எனக்குப் பிடித்த முதல் விஷயம்.. அவரின் தழுவலும் விஜயகாந்த் அவர்களைக் கன்னத்தில் தொடும் உணர்வும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது... கண்ணீர் வரவைக்கும் காணொலி... தூர இருந்து உங்களை ரசிக்கிறேன் மதிக்கிறேன்... அரசியல் தாண்டி... நீங்கள் நீடூடி வாழ்க." என்று பதிவிட்டுள்ளார்.


[X] Close

[X] Close