'ஹேங் ஓவர்' பட காமெடியன் மரணம் #BrodyStevens | hang over Comedian Brody Stevens Died at 48

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (23/02/2019)

கடைசி தொடர்பு:20:30 (23/02/2019)

'ஹேங் ஓவர்' பட காமெடியன் மரணம் #BrodyStevens

'ஹேங் ஓவர்' படங்களில் காமெடியனாக  நடித்திருந்த பிரோடி ஸ்டீவன்ஸ் திடீர் மரணம் அடைந்தார்.  பிரபல அமெரிக்க ஸ்டாண்ட அப் காமெடியனும், நடிகருமான் பிரோடி ஸ்டீவென்ஸ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 48. தி ஹாங் ஓவர், டியூ டேட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ஸ்டீவன்ஸ் எஹ்.பி.ஓ தொலைக்காட்சிக்கு தன் நண்பர் ஜாக் கல்ஃபெனாக்கஸுடன் இணைந்து நடித்த நகைச்சுவை ஆவணப் தொடரான "Brody Stevens: Enjoy It!." மிக பிரபலமாக பேசப்பட்டது.  

பிரோடி ஸ்டீவன்ஸ்

 

தனக்கு இருந்த பை-போலார் டிஸ் ஆர்டர், 2011ல் தான் கைதானது, மனநிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என அனைத்தையும் இந்தத் தொடரில் பேசியிருந்தார். 

ஜாக் கல்ஃபெனாக்கஸுடன்  பிரோடி

இந்நிலையில், நேற்று தனது லாஸ் ஏஞ்சலஸ் வீட்டில் மரணமடைந்து காணப்பட்டார். இவரது மரணம் தற்கொலை என போலீசாரால் உறுதி செய்யப்பட்டது. இதற்கான காரணம் குறித்து அந்த மாகாண சட்ட ஒழுக்கு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். தந்து 'ஸ்டாண்ட அப் நகைச்சுவை' நிகழ்ச்சிகளில் மிகவும் பாஸிட்டிவ் விஷயங்களையே சொல்லி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரோடி

இவரது இழப்பால் வாடும் நகைச்சுவை சமூகம் சார்ந்த நண்பர்கள் ,'மனக்குழப்பம் இருந்தால் மனதிற்கு நெருக்கமானவர்களை அணுகுங்கள் தற்கொலை ஒரு முடிவல்ல. அது பிரச்னைகளுக்கும் முடிவல்ல' என சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றன.

brody stevens

பிரோடி ஸ்டீவன்ஸின் ரசிகர்கள் அவரது பேச்சுகளே தங்களை அழுத்தத்தில், பயத்திலிருந்து வெளிக்கொண்டு வந்தன எனத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 


[X] Close

[X] Close