`ஒரு நாள்.. ஒரு ஆள்... டப்பிங் தியேட்டர் பக்கம் தனியா போகையில! - வசனத்துக்கான விஜய்சேதுபதியின் உழைப்பு | Actor Vijay Sethupathi's dubbing for Super Deluxe trailer

வெளியிடப்பட்ட நேரம்: 12:34 (24/02/2019)

கடைசி தொடர்பு:12:35 (24/02/2019)

`ஒரு நாள்.. ஒரு ஆள்... டப்பிங் தியேட்டர் பக்கம் தனியா போகையில! - வசனத்துக்கான விஜய்சேதுபதியின் உழைப்பு

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.  

சூப்பர் டீலக்ஸ்

இப்படத்திற்கு  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நான்கு வெவ்வேறு தளங்களில் நடக்கும் கதைகளைக் கொண்டு அந்தாலஜி வகையில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே சேகர் ஆகியோர் கதை எழுதியிருக்கின்றனர். பி.சி ஸ்ரீராம், பி.எஸ் வினோத், நீரவ் ஷா ஆகியோர் இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்.'

விஜய் சேதுபதி

வரும் மார்ச் 29-ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் கடந்த 22-ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதில் விஜய் சேதுபதி, ‘ஒரு நாள் ஒரு ஆள புலி தொரத்த...’ என்ற நீளமான வசனத்தை பேசி அசத்தியிருப்பார். காட்சிகளைத் தாண்டி விஜய் சேதுபதியின் இந்த வசனம் அவரது ரசிகர்களை அதிகம் ஈர்த்தது. இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர் வசனத்துக்கு, விஜய் சேதுபதி எவ்வாறு டப்பிங் செந்தார், அதற்காக எவ்வளவு சிரமப்பட்டார் என்ற வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  ‘ ஒரு நாள்.. ஒரு ஆள்.. தனியா டப்பிங் தியேட்டர் பக்கம் போகையில’ என்று குறிப்பிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுவும் சமூகவலைதளங்களில் செம்ம ஹிட் அடித்து வருகிறது. 


[X] Close

[X] Close