கார்த்தியுடன் அறிமுகமாகும் 'இன்கேம் இன்கேம் காவாலே' நாயகி | rashmika mandanna to debut in karthi 19

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (24/02/2019)

கடைசி தொடர்பு:17:30 (24/02/2019)

கார்த்தியுடன் அறிமுகமாகும் 'இன்கேம் இன்கேம் காவாலே' நாயகி

'இன்கேம் இன்கேம் காவாலே' என ரசிகர்களின் இதயத்துடிப்பைக் கடன் வாங்கிய நடிகை  ராஷ்மிகா மந்தனா. அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தில் இவர்  தமிழில் அறிமுகமாகிறார் என வதந்திகள் பரவ அதை ராஷ்மிகாவே மறுத்திருந்தார்.இந்நிலையில் 'ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் அறிமுகமாகவிருக்கிறார்.  

rashmika

கார்த்தியின் 19வது படமாக தயாராகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கின்றன. கார்த்தியின் 'சிறுத்தை', 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய படங்கள் போன்று இப்படமும் அனைவரையும் கவரும் ஒரு கமர்சியல் படமாகத் தயாரிக்கின்றது. ஜெய் கலையமைப்பில், விவேக் - மெர்வின் இசையமைக்கவுள்ளனர். தீரன், அடங்கமறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த  சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும்,  ரூபன் எடிட்டராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு புரொடக்‌ஷன் டிசைனராக ராஜீவன் பணியாற்றி வருகிறார் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மார்ச் 10ம் தேதி  படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 

கார்த்தி

 தற்போது, 'மாநகரம்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் பெயரிடப்படாத படத்தையு ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close