Published:Updated:

`பூமியில் உள்ள பெண்கள் அனைவரும் ஜெயித்துவிட்டனர்!’- ஆஸ்கர் வென்ற ‘பீரியட்’ படம் உருவான கதை

`பூமியில் உள்ள பெண்கள் அனைவரும் ஜெயித்துவிட்டனர்!’- ஆஸ்கர் வென்ற ‘பீரியட்’ படம் உருவான கதை

`பூமியில் உள்ள பெண்கள் அனைவரும் ஜெயித்துவிட்டனர்!’- ஆஸ்கர் வென்ற ‘பீரியட்’ படம் உருவான கதை

`பூமியில் உள்ள பெண்கள் அனைவரும் ஜெயித்துவிட்டனர்!’- ஆஸ்கர் வென்ற ‘பீரியட்’ படம் உருவான கதை

`பூமியில் உள்ள பெண்கள் அனைவரும் ஜெயித்துவிட்டனர்!’- ஆஸ்கர் வென்ற ‘பீரியட்’ படம் உருவான கதை

Published:Updated:
`பூமியில் உள்ள பெண்கள் அனைவரும் ஜெயித்துவிட்டனர்!’- ஆஸ்கர் வென்ற ‘பீரியட்’ படம் உருவான கதை

இந்த ஆண்டுக்கான 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்றது. கடந்த வருடம் வெளியான திரைப்படங்களில் சிறந்த நடிகர், நடிகை, இசை, இயக்குநர், அனிமேஷன், குறும்படம் என மொத்தம்  24 பிரிவுகளின் கீழ் 52 படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் உள்ள பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள  ‘பீரியட்’ என்ற ஆவண குறும்படத்துக்கு விருது கிடைத்துள்ளது. 

இந்தியாவில் உள்ள கிராமங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிக பிரச்னைகளை சந்திக்கின்றனர். அதை ஒரு களங்கமாக பார்க்கும் முறை இன்னும் பல கிராமங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. உடல் உபாதைகளையும் தாண்டி பாதுகாப்பு ரீதியிலும், குடும்ப ரீதியிலும் இந்த நாள்களில் பெண்கள் அதிகம் சிரமப்படுகின்றனர். சானிடரி நாப்கின் பயன்படுத்தாத கிராமங்களும் இன்னும் உள்ளன. தமிழகத்தின், கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்ற இன்ஜினீயர் மனிதர்களால் இயக்கப்படும் சிறிய பேட் மிஷினை உருவாக்கி அதன் மூலம் கிராமத்துப் பெண்களுக்குச் சுகாதாரமும், வேலைவாய்ப்பையும் பெற்றுத்தந்தார். இவை அனைத்தையும் மையக் கருவாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ் (Period. End Of Sentence) என்ற ஆவண குறும்படம். 

கலிஃபோர்னியா, ஓக்லாண்ட் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் மெலிசா பெர்டன் (Melissa Berton) என்பவரும் அவரின் மாணவி ஹெலன் என்சரும் (Helen Yenser) ஐ.நா சபை கூட்டத்தில் கலந்துகொண்டபோது இந்திய பெண்கள் படும் துன்பங்களைப் பற்றி அறிந்துள்ளனர். இதற்கு நம்மால் முடிந்த ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் எனக் கருதியுள்ளனர். பின்னர் அதே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இரண்டு குழுவாகப் பிரிந்து, `ஆக்‌ஷன் இந்தியா' என்ற சமூக அமைப்புடன் இணைந்து பேட் திட்டத்தை தொடங்கியுள்ளனர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர்கள் பல இடங்களில் ரொட்டித் துண்டுகளை விற்று அதன் மூலம் 12,000 டாலர் பணம் சேர்த்துள்ளனர். இதுதான் படம் தயாரிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கியுள்ளது. அந்தப் பணத்தைக்கொண்டு முதலில் ஒரு பேட் இயந்திரத்தை வாங்கியுள்ளனர். அதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் சானிடரி நாப்கின்களை கிராமங்களுக்குச் சென்று மலிவு விலையில் விற்றுள்ளனர். தொடர்ந்து அதிலிருந்து கிடைத்த வருமானத்தில் இன்னும் பல இயந்திரங்களை வாங்கி அதைத் தொழிலாகவே நடத்தியுள்ளனர்.

ஒரு வருட உழைப்புக்குப் பிறகு இறுதியில் பேட் இயந்திரத்தின் மூலம் கிடைத்த பணத்தை வைத்து ஆஸ்கர் விருது வென்ற ‘பீரியட்’ படத்தையும் தயாரித்துள்ளார் கலிஃபோர்னியா ஆசிரியர் மெலிசா பெர்டன். 25 நிமிடங்கள் கொண்ட இந்தப் படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த பெண் இயக்குநரான ரெய்கா ஸெஹ்டாப்ச்சி (Rayka Zehtabchi) இயக்கியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த குனீத் மோங்கா (Guneet Monga) என்ற பெண் இப்படத்தின் இணை தயாரிப்பாளர். 

படம் பற்றி இயக்குநர் ரெய்கா ஸெஹ்டாப்ச்சி கூறும்போது,  ``இந்தப் படம் செய்யலாம் என முடிவெடுத்து நான் இந்தியாவுக்குச் சென்றேன். அங்குள்ள பெண்களை நேரில் சந்தித்து அவர்கள் படும் துயரங்களைத் தெரிந்துகொண்டு அதன் பிறகுதான் படத்தைத் தொடங்கினேன். பெண்களின் துன்பத்தைப் பார்க்கும்போது இது உண்மையில் மிகப்பெரும் அவமானமாக உள்ளது. நான் எப்போதும் அழுதது கிடையாது. என் மாதவிடாய் காலங்களிலும் அழுதது கிடையாது. மாதவிடாய் தொடர்பான படம் ஆஸ்கர் விருதை வெல்லும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை’ என தெரிவித்துள்ளார். 

விருது வென்றது தொடர்பாக பேசியுள்ள இந்திய தயாரிப்பாளர் குனீத் மோங்கா, `நாம் ஜெயித்து விட்டோம். பூமியில் உள்ள அனைத்துப் பெண்களும் வெற்றிபெற்றுவிட்டனர். நீங்கள் அனைவரும் பெண் கடவுள்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்’ என  தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism