ஸ்ரீதேவியின் புடவையை ஏலத்துக்கு விட்ட போனி கபூர் குடும்பம்! | Sridevi's saree auctioned a year after her death

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (25/02/2019)

கடைசி தொடர்பு:17:30 (25/02/2019)

ஸ்ரீதேவியின் புடவையை ஏலத்துக்கு விட்ட போனி கபூர் குடும்பம்!

நடிகை ஸ்ரீதேவி இறந்து நேற்றோடு ஒரு வருடங்கள் முடிந்திருக்கிறது. துபாய்க்கு உறவினர் திருமணம் விஷயமாகச் சென்ற ஸ்ரீதேவி அங்கே குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவரது மரணம் தமிழ் மற்றும் இந்தி சினிமா உலக ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஶ்ரீதேவி


இவருடன் பணிபுரிந்த ஏராளமான நடிகர், நடிகைகள் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இதற்குப் பின்னர், ஶ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக நடிகர் அஜித்தை வைத்து தமிழில் படம் தயாரித்துக்கொண்டிருக்கிறார் கணவர் போனி கபூர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஶ்ரீதேவியின் வீட்டில் இவருக்காக திதி கொடுக்கப்பட்டது. இதில் அஜித் அவரின் மனைவியுடன் கலந்துகொண்டார். 

அஜித் ஷாலினி

இந்நிலையில் ஶ்ரீதேவி பயன்படுத்திய கோட்ட ரக புடவைகளை ஏலத்தில் விட்டுள்ளனர் போனி கபூர் குடும்பத்தினர். 40,000-க்கு இந்தப் புடவைகளை கேன்சர் இந்தியா நிறுவனம் ஏலத்துக்கு விட்டது. தற்போது ஏலம் தொகையாக 1,30,000-க்குப் புடவைகள் ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தின் மூலமாகக் கிடைத்த தொகையை தொண்டு நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறார் போனி கபூர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close