'அது என் அக்கவுன்ட் இல்லை; பிளாக் செய்யுங்கள்!'-நண்பர்களுக்கு 'வேட்டையன்' கவின் ராஜ் வேண்டுகோள் | That is not my account; block him, says kavin raj

வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (25/02/2019)

கடைசி தொடர்பு:18:09 (25/02/2019)

'அது என் அக்கவுன்ட் இல்லை; பிளாக் செய்யுங்கள்!'-நண்பர்களுக்கு 'வேட்டையன்' கவின் ராஜ் வேண்டுகோள்

கவின் ராஜ்

சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பெயரிலும், பிரபலங்களின் ஃபேன்ஸ் பேஜ் எனவும் பல பக்கங்களைப் பார்க்க முடியும். அதிலும் ஒரு சிலரின் பெயரில் தவறான போஸ்ட்டுகளைப் போடுவதும் அவ்வப்போது நடப்பதுதான். அந்த வகையில், தற்போது விஜய் டி.வி புகழ் கவின் ராஜ் இதில் சிக்கியுள்ளார். இவரின் பெயரில் யாரோ ஒருவர் ஃபேஸ்புக்கில் புரஃபைலில் அவர் படத்தை வைத்து படங்களையும், செய்திகளையும் பகிர்ந்துவருகிறார். 'இந்தப் பெயரில் யாருடைய ரிக்வெஸ்ட் வந்தாலும் அக்சப்ட் செய்ய வேண்டாம்' எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

கவின் ராஜ் 


விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான  'கனா காணும் காலங்கள்' தொடரில், சிவா கதாபாத்திரத்தில் நடித்தவர் கவின் ராஜ். அதன் பிறகு, 'சரவணன் மீனாட்சி 2' சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் நடித்த வேட்டையன் கதாபாத்திரம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் இருக்கும் கவின் ராஜ், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும்  இருந்தார். விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான  'கிங்ஸ் ஆஃப் காமெடி சீசன் 2' மற்றும் விஜய் டெலிவிஷன் விருதினையும் தொகுத்து வழங்கினார்.

கவின் ராஜ்

அதன் பிறகு, சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 'நட்புனா என்னன்னு தெரியுமா' என்கிற படத்தில் ரம்யா நம்பீசனுடன் இணைந்து நடித்தார். அடுத்தடுத்து ஹீரோவாகப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே இவரின் ஆசை. அதனால், தற்போது அடுத்தடுத்த படங்களில் தீவிரம்காட்டி வருபவருக்கு ஃபேஸ்புக் மூலமாக ஒரு பிரச்னை எழுந்துள்ளது. 

ஃபேஸ்புக்கில் தன் பெயரில் யாரோ ஒருவர் கணக்கை ஆரம்பித்து, தன் படங்களைப் பதிவேற்றுவதுடன், அவருடைய பிரன்ட் பட்டியலில் உள்ளவர்களுக்கு ரிக்வெஸ்ட் தந்து வருகிறாராம். இதனால், மிகவும் மன உளைச்சலில் உள்ளார் கவின் ராஜ்.  இதை அவருடைய ஃபேஸ்புக் பக்கத்திலேயே ஸ்கிரீன் ஷாட் எடுத்து பிளாக் செய்யுங்கள் எனவும் சொல்லிவருகிறார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close