எகிப்து  படத்தில் நடிக்கிறார், அஜித் - 'சிறுத்தை' சிவா இயக்குகிறார்! | Ajith will again pair with veeram siva

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (26/02/2019)

கடைசி தொடர்பு:12:50 (26/02/2019)

 எகிப்து  படத்தில் நடிக்கிறார், அஜித் - 'சிறுத்தை' சிவா இயக்குகிறார்!

இப்போது, 'சதுரங்க வேட்டை' வினோத் இயக்கும் 'பிங்க்' ரீ-மேக் படத்தில் நடிக்க ஹைதராபாத்துக்கு பறந்திருக்கிறார், அஜித். 'பிங்க்' படத்துக்காக 25 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அஜித் இல்லாத அனைத்து காட்சிகளையும்  முன்பே படமாக்கி முடித்துவிட்டனர். வினோத் இப்போது,  அஜித்  வழக்கறிஞராக  நடிக்கும் காட்சிகளும், அவரை எதிர்த்து வாதாடும் வக்கீலாக வரும் ரங்கராஜ் பாண்டே  நடித்துவரும் காட்சிகளையும் படமாக்கி வருகிறார்.  விரைவில்  முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும். அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி, இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, அஜித் அடுத்து நடிக்கும்  படத்தையும் வினோத்தே இயக்குகிறார் என்கிற செய்தியில் புதிய மாற்றம். 

அஜித்

'பிங்க்' படத்துக்குப் பிறகு, சிறிய இடைவெளி இருந்தால் நல்லது என்று வினோத் கேட்க, அஜித் ஓ.கே சொல்லிவிட்டார். போனிகபூருக்கும், அஜித்துக்கும் இடையிலான அன்பு அதிகரித்துவருகிறது. சமீபத்தில் தன்வீட்டுக்கு வந்த அஜித்திடம் போனிகபூர்,  'ஹெப்டா - தி லாஸ்ட் லெக்சர்' என்ற எகிப்திய படத்தை திரையிட்டுக்  காட்டியிருக்கிறார். அந்த படத்தைப் பார்த்து அசந்துபோன அஜித், தமிழில் எகிப்து படத்தை ரீ-மேக் செய்யலாம், உரிமை யாரிடம் இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.

சிவா

ஏற்கெனவே, வெளிமொழி உரிமையை  வாங்கி விட்டதாக போனிகபூர் சொல்ல, அஜித்துக்கு சந்தோஷம் தாங்கவில்லை. வினோத், அடுத்த படத்துக்கான மெருகேற்றும் வேலையில் இறங்க, எகிப்திய  திரைப்படத்தின் தமிழ் ரீ-மேக்கை 'சிறுத்தை' சிவா டைரக்‌ஷன் செய்கிறார், போனிகபூர் தயாரிக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close