தனுஷின் மகனாக கென் கருணாஸ்! - `அசுரன்' படத்தின் அடடே அப்டேட்ஸ் | karunas son will act on dhanush's asuran movie

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (26/02/2019)

கடைசி தொடர்பு:14:30 (26/02/2019)

தனுஷின் மகனாக கென் கருணாஸ்! - `அசுரன்' படத்தின் அடடே அப்டேட்ஸ்

`பொல்லாதவன்', `ஆடுகளம்', `வட சென்னை' படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி நான்காவது முறையாக `அசுரன்' படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது. மலையாள நடிகை மஞ்சு வாரியர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து பவன் மற்றும் `ஆடுகளம்' நரேனும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளனர்.

அசுரன் 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம், `அசுரன்'. சமீபத்தில்கூட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி செம வைரலானது. பத்து நாளைக்கு முன்பு பசுபதி படத்தில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், `திருடா திருடி', `யோகி', `சீடன்'  போன்ற படங்களை இயக்கிய சுப்பிரமணிய சிவா படத்தில் வழக்கறிஞராகவும், இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆய்வாளராக நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து `பொல்லாதவன்', `வடசென்னை' படத்தில் நடித்த பவன் மற்றும் `ஆடுகளம்' படத்தில் நடித்த நரேனும் படத்தில் இணைந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

கென் கருணாஸ்

இது மட்டுமன்றி நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ், படத்தில் தனுஷின் மகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகை தருகிறார், கென் கருணாஸ். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். திருநெல்வேலிக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. 


[X] Close

[X] Close