விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன் -`தமிழரசன்’ படத்தின் அப்டேட்ஸ் | Ramya Nambesan paired with Vijay antony

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (26/02/2019)

கடைசி தொடர்பு:14:45 (26/02/2019)

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன் -`தமிழரசன்’ படத்தின் அப்டேட்ஸ்

விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம், `தமிழரசன்'. `தாஸ்' படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். மேலும், இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

விஜய் ஆன்டனி

`தமிழரசன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாளாக சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இருவருக்குமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. `ஒஸ்தி', `தேவி' போன்ற படங்களில் நடித்த சோனு சூத், படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில், 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராடும் காட்சிக்கு அனல் தெறிக்க ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியிருப்பதாக ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு தெரிவித்திருக்கிறார். மேலும், இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரனவ் ராஜா, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close