`மிஸ்டர் பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன் அஜித்தான்!'- ஸ்ருதி ஹாசன் | Shruthi haasan advised students in ViT university

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (26/02/2019)

கடைசி தொடர்பு:15:00 (26/02/2019)

`மிஸ்டர் பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன் அஜித்தான்!'- ஸ்ருதி ஹாசன்

வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற 'ரிவேரா 2019' என்ற கலைநிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு வருகை தந்த நடிகை ஸ்ருதி ஹாசன், மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

ஸ்ருதி ஹாசன்

அப்போது, மாணவர்களின் கேள்விக்கு மிகப் பொறுமையாக பதில் கூறினார். தனக்கு மிகவும் பிடித்த படம் 'மகாநதி' என்றும், சிறந்த நடிகர் 'கமல்ஹாசன்' என்றும் கூறினார். மேலும், தான் நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய பணிகளில் ஈடுபடுவதைக்காட்டிலும் ‘என்டர்டெயினராக’ இருப்பதையே பெரிதும் விரும்புவதாக அவர் கூறினார்.  

ஸ்ருதி ஹாசன்

‘நீங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய படங்களில் நடிக்கும்போது, எந்தப் படவுலகம் உங்களுக்கு சிறந்ததாகவும் இலகுவாகவும் இருக்கிறது’ என்று மாணவர்கள் கேட்டதற்கு, தனக்கு ‘தெலுங்கு, தமிழ்,  இந்தி என எந்தத் துறையாக இருந்தாலும் எந்தப் படமாக இருந்தாலும், நடிப்பதைத்தான் விரும்பிச் செய்வதாகத் தெரிவித்தார். பின்பு நடிகர் அஜித் பற்றி கேட்டதற்கு, ‘தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் என்றும், நான் சந்தித்ததில் மிகவும் பண்பான நடிகர் அவர்தான்’ என்றும் கூறினார். 

அஜித்

அடுத்து, 'மாணவர்கள் எந்தக் காரணத்தைக்கொண்டும் தனித்துவத்தை இழக்க வேண்டாம் என்றும்,  மது அருந்திவிட்டு வாகனத்தில் பயணிக்க வேண்டாம் என்றும்,  கார்களில் செல்லும்போது ‘சீட் பெல்ட்’ கட்டாயம் அணிந்து பயணிக்க வேண்டும் என்றும் ஸ்ருதி அன்பான வேண்டுகோள் விடுத்தார். விழாவின் நிறைவில், ஒட்டுமொத்த சாம்பியனுக்கான சுழற்கோப்பையை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கும், விளையாட்டிற்கான சாம்பியன் கோப்பையை வி.ஐ.டி கல்லூரிக்கும் வழங்கி, மாணவர்களை வாழ்த்தினார்.


[X] Close

[X] Close