`அந்தக் குரலே சரியா வரலைன்னா எப்படி?’ - சிகிச்சையில் இருப்பதாக ஜாக்குலின் பேட்டி | vijay tv jacqueline is in under voice treatment

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (26/02/2019)

கடைசி தொடர்பு:16:30 (26/02/2019)

`அந்தக் குரலே சரியா வரலைன்னா எப்படி?’ - சிகிச்சையில் இருப்பதாக ஜாக்குலின் பேட்டி

ஜாக்குலின்

`ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்குக் குரல் வளம் ரொம்ப ரொம்ப முக்கியம். அந்தக்  குரலே சரியா வரலைன்னா எப்படி? அதனால்தான் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கிறேன்’’ என்கிறார் விஜய் டிவி புகழ் வி.ஜே ஜாக்குலின்.

ஜாக்குலின்

விஜய் டிவியில் ஒளிபரப்பான, `கலக்கப்போவது யாரு’ காமெடி நிகழ்ச்சியை ரட்சன் மற்றும் ஜாக்குலின் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினார்கள். இருவரின் காம்பினேஷனும் ஹிட் அடிக்க, அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை இருவரும் இணைந்தே தொகுத்து வழங்கினார்கள். ரட்சன் மற்றும் ஜாக்குலின் இருவரும் காதலிப்பதாகவும் ஒரு வதந்தி இருந்தது. நான் இன்னும் கமிட்டாகலைங்க எனத் தெளிவாகப் பதிலளித்திருந்தார். 

அதேபோல், மகேஷ், தாடி பாலாஜி எனப் பல பேர் ரவுண்டுகட்டி கலாய்த்து ஓட்டினாலும் அசராதவர் ஜாக்குலின். எதையும் தன் சிரிப்பாலேயே ஈஸியாகக் கடந்துவிடும் ஸ்போட்டிவான ஆள். நயன்தாரா, சரண்யா போன்றோர் நடித்த `கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவுக்குத் தங்கையாக நடித்திருந்தார். ஜாக்குலின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.  

ஜாக்குலின்

மிக முக்கியமாக ஜாக்குலினின் குரல்தான் அவருக்கான அடையாளம். தன் வித்தியாசமான குரலால் பல ரசிகர்களைத் தன்வசம் வைத்திருந்தார். `கோலமாவு கோகிலா’ படத்தில் சினிமா பயணத்தை ஆரம்பித்திருக்கும் இந்த வேளையில், தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம். இந்நிலையில் நீண்ட நாள்களாக இருந்துவரும் சைனஸ் பிரச்னை காரணமாக ட்ரீட்மெண்ட்டில் உள்ளவர், கூடவே உடற்பயிற்சியின் வாயிலாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். 
``கூடிய சீக்கிரம் விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் என்னைப் பார்க்கலாம்’’ என்கிறார் உற்சாகமாக.

`ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்குக் குரல் வளம் ரொம்ப ரொம்ப முக்கியம். அந்தக் குரலே சரியா வரலைன்னா எப்படி. அதனால்தான் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கிறேன். ஒரு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறேன். பேசுவதிலும் எனக்குச் சிக்கல் ஆனது. அதனால்தான் இந்த உடனடி சிகிச்சையில் இருக்கிறேன்’’ என்கிறார் ஜாக்குலின்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close