45 நாள்கள் கால்ஷீட்... முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு டபுள் ஆக்ட்டா? #thalaivar166 | No double act for rajini in #thalaivar166

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (26/02/2019)

கடைசி தொடர்பு:16:15 (26/02/2019)

45 நாள்கள் கால்ஷீட்... முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு டபுள் ஆக்ட்டா? #thalaivar166

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல கடந்த ஐந்தாண்டு காலமாக ரஜினிக்கு தொடர்ந்து கதை சொல்லி வந்தார், முருகதாஸ். ரஜினி அழைக்கும்போது  `ஸ்பைடர்மேன்' படப்பிடிப்பில் மகேஷ்பாபுவை இயக்கிக்கொண்டு இருந்தார். முருகதாஸ் கூப்பிடும்போது ரஜினி 'காலா' படத்தில் பிஸியாக இருந்தார். இப்போது ஒரு வழியாக இருவரும் கைகோத்திருப்பதால் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. `தளபதி' படத்தில் இடம்பெற்ற 'ராக்கம்மா கையத்தட்டு'  `சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடல் காட்சியில் பிரமிக்கத்தக்க வகையில் ஒளிப்பதிவு செய்து மிரட்டி இருப்பார், சந்தோஷ் சிவன். 

ரஜினி

அதன்பிறகு இப்போது ரஜினியோடு இணைந்திருக்கிறார். ஒரு படத்துக்கு மொத்தமாக எத்தனை நாள்கள் கால்ஷீட் தருகிறாரோ அந்த நாள்களில் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொள்வார். இடையில் சில நாள்கள் அதிகமானா கறாராக 'நோ' சொல்லும் பழக்கம் உடையவர், சந்தோஷ்சிவன். ஏற்கெனவே, 'துப்பாக்கி' பட  விஷயத்தில் அதுபோல நடந்துகொள்ள, விஜய் நடித்த வெளிநாட்டுப் பாடல் காட்சியை நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டியைக் கொண்டு ஒளிப்பதிவு செய்தார் முருகதாஸ். ரஜினி படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மும்பையிலேயே நடக்கிறது. ஒரே ஷெட்யூலில் முழு படத்தையும் முடிக்க தெளிவாக திட்டமிட்டிருக்கிறார், முருகதாஸ்.

ரஜினி

சந்தோஷ்சிவன் கால்ஷீட்டை முன்கூட்டியே மொத்தமாக வாங்கிவிட்டார். ரஜினி லம்ப்பாக 45 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகச் சொல்கின்றனர். சமீபகாலமாக ஷோஷியல்  மீடியாவில் ரஜினி போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் பரவி வருவது பொய்யான செய்தி. ரஜினி ஒரு வேடத்தில் மட்டுமே நடிக்கிறார் என்பது மட்டுமே உண்மைத் தகவல். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close