நவாஸுதின் சித்திக்கியை வலுக்கட்டாயமாக செல்ஃபி எடுத்த ரசிகர்!- வைரலாகும் வீடியோ | A fan ferociously took selfie with Nawazudin Siddiq

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (26/02/2019)

கடைசி தொடர்பு:17:45 (26/02/2019)

நவாஸுதின் சித்திக்கியை வலுக்கட்டாயமாக செல்ஃபி எடுத்த ரசிகர்!- வைரலாகும் வீடியோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நவாஸுதின் சித்திக்கி. இரண்டு நாள் முன்பு கூட்டத்தில் இவரின் ரசிகர் ஒருவர், ஆரவாரமாக இவரோடு செல்ஃபி எடுத்த வீடியோதான் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்ட்!

நவாஸுதின் சித்திக்கி

பாலிவுட்டின் முக்கிய நடிகர் நவாஸுதின். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உண்டு. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான `சாக்ரெட் கேம்ஸ்' எனும் வெப் சீரியஸின் மூலம் தமிழ் சினிமா பக்கமும் அதிக கவனத்தைப் பெற்றார். பொது இடங்களில் செலிப்ரிட்டிகளுடன் செல்ஃபி எடுப்பது வழக்கம். அதுவே நாளுக்கு நாள் தீவிரமடைந்தும் வருகிறது. சமீபத்தில் நடிகர் சிவக்குமாரோடு ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது செல்போனை தட்டிவிட்டது சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. தற்போது, பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக்கிற்கும் இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் தனது காரை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த நவாஸுதின் சித்திக்கை அவரின் ரசிகர் ஒருவர் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ஃபி எடுக்க முயன்றார். ஆனால், எந்தவித கோபத்தையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக நடந்து சென்றார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோதான் தற்போது வைரலாகப் போய்க்கொண்டிருக்கிறது. 

 

 

 


[X] Close

[X] Close