இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிக்கிறார் விக்ரம் பிரபு! | vikram prabhu to act in a film produced by mani rathnam's madras talkies

வெளியிடப்பட்ட நேரம்: 20:11 (26/02/2019)

கடைசி தொடர்பு:20:11 (26/02/2019)

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிக்கிறார் விக்ரம் பிரபு!

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் தனா. இவரது இயக்கத்தில் `படைவீரன்’ என்ற படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, அவர் இயக்கவிருக்கும் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  தனாவுடன் இணைந்து இயக்குநர் மணிரத்னத்தின் பங்கும் கதையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பிரபு

இந்தக் கதையில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது. ஆனால், அதை அப்போது படக்குழு மறுத்துள்ளது. இந்நிலையில், அந்தப் படத்தில் விக்ரம் பிரபு நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார். தவிர, விக்ரம் பிரபுவின் தங்கை கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். '96 படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close