Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

Published:Updated:
பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

கேரளாவில் பெண்கள் அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் பா.இரஞ்சித் ‘பார்வதி எனக்குப் பிடித்த நடிகை, அவர் தன் பெயரிலிருந்து மேனன் என்கிற சாதி அடைமொழியை நீக்கிய பிறகு அவர் மேல் மரியாதை கூடிவிட்டது’ எனப் பாராட்டியிருக்கிறார். அதில் பார்வதிக்கு ரொம்பவே மகிழ்ச்சி... சமீபத்தில் தான் நடித்து வெளியான மலையாளப்படம் ‘உயரே’ கேரளாவில் பெரிய ஹிட் அடித்திருப்பதில் கூடுதல் சந்தோஷத்தில் இருக்கிறார் பார்வதி.

பிட்ஸ் பிரேக்

மீர்கான் அடுத்து நடிக்கும் படம் ‘லால் சிங் சத்தா.’ 1994-ல் டாம் ஹேங்க்ஸ் நடிப்பில் வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக் இது. பாரமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேசி உரிமையெல்லாம் வாங்கியிருக்கிறார்கள். படம் குறித்து அறிவித்துவிட்டார் அமீர். ஆனால் ஷூட்டிங் அக்டோபரில்தானாம். படத்திற்காக 20கிலோ எடையைக் குறைத்து ஒல்லியாக மாறவிருக்கிறாராம் அமீர். அதற்காகத்தான் இந்த ஆறுமாத டைம்!

பிட்ஸ் பிரேக்

ந்தியில்தான் முதலில் அறிமுகமானார் ரகுல்ப்ரீத். இப்போது மீண்டும் இந்திக்கே திரும்பியிருக்கிறார். அஜய்தேவ்கனோடு ‘தே தே ப்யார் தே’ எனும் ரொமான்டிக் காமெடிப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்போ இனிமே இந்தப் பக்கம் வரமாட்டீங்களா என விசாரித்தால்... `என்னதான் பாலிவுட்டில் நடித்தாலும் எனக்கு தென்னிந்திய சினிமாதான் பிடித்த இடம், எனவே தமிழ், தெலுங்கிலும் தொடர்ந்து நடிப்பேன்’ எனச் சொல்லியிருக்கிறார்.