Published:Updated:

“ரெண்டு பேரும் புரபோஸ் பண்ணலை!”

“ரெண்டு பேரும் புரபோஸ் பண்ணலை!”
பிரீமியம் ஸ்டோரி
“ரெண்டு பேரும் புரபோஸ் பண்ணலை!”

“ரெண்டு பேரும் புரபோஸ் பண்ணலை!”

“ரெண்டு பேரும் புரபோஸ் பண்ணலை!”

“ரெண்டு பேரும் புரபோஸ் பண்ணலை!”

Published:Updated:
“ரெண்டு பேரும் புரபோஸ் பண்ணலை!”
பிரீமியம் ஸ்டோரி
“ரெண்டு பேரும் புரபோஸ் பண்ணலை!”

‘ஜெஸ்லி குடும்பத்துல மூணு ட்வின்ஸ், என் குடும்பத்துல ஒரு ட்வின்... இருந்தாலும் எங்களுக்கும் ட்வின்ஸ் பிறப்பாங்கன்னு நாங்க நினைச்சுக்கூடப் பார்க்கலை. ஆதியனும் ஜேடனும் எங்களுக்குக் கிடைச்ச சர்ப்ரைஸ் கிஃப்ட்’’

இரட்டைக் குழந்தைகளுடன் விளையாடியபடியே உற்சாகமாகப் பேசுகிறார் பரத். அவர் மனைவி ஜெஸ்லியும் விளையாட்டில் இணைந்துகொள்ள, அந்த நால்வர் உலகம் சொர்க்கமாகிறது.

‘`பொதுவா, ஒரு குழந்தையை வளர்க்கிறதே கஷ்டம்னு சொல்லுவாங்க. ட்வின்ஸ் என்பதால், நாங்க அதிக கவனத்துடன் வளர்க்கிறோம். இன்ஃபெக்‌ஷனாகிடக் கூடாதுன்னு, இவங்க பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகளைப் பார்க்க உறவினர்களைக்கூட அனுமதிக்க முடியலை. இப்போ ரெண்டு பேரும் ஆரோக்கியமா வளர்ந்துட்டாங்க. அதனால நண்பர்கள், உறவினர்கள், சினிமா பிரபலங்கள்னு பலரும் வீட்டுக்கு வந்து குழந்தைகளைப் பார்த்து வாழ்த்திட்டுப் போறாங்க. மகிழ்ச்சி, நெகிழ்ச்சின்னு இவங்க ரெண்டு பேரும் வந்ததுக்கு அப்புறம் எல்லாமே எங்க வாழ்க்கையில கூடியிருக்கு. கூடவே நிறைய பொறுப்புகளும்” என்கிற பரத், மனைவியைப் பார்த்துச் சிரிக்கிறார்.

“ரெண்டு பேரும் புரபோஸ் பண்ணலை!”

‘`குழந்தைங்களை வளர்க்கிறதில் எங்க ரெண்டு பேரோட பங்களிப்பும் இருக்கணும்ங்கிறதில் நான் உறுதியா இருக்கேன். வியர்வை வரலைன்னா கைகால் நடுங்க ஆரம்பிச்சுடுங்கிற அளவுக்கு இவருக்கு ஃபிட்னஸ் ஆர்வம், ஹெல்த்ல அக்கறை. இதையெல்லாம்விட அப்பாங்கிற பொறுப்பு முக்கியமாச்சே? அதனால, `என்ன வேலை இருந்தாலும், கட்டாயம் குழந்தைகளுக்கும், எனக்கும் நேரம் ஒதுக்கித்தான் ஆகணும்’னு இவர்கிட்ட கண்டிஷன் போட்டிருக்கேன். பகல்ல இவருக்கு வேலை இருக்கும். அதனால, இரவில் ஜேடனைப் பார்த்துக்கிற பொறுப்பு இவருடையது; நான் ஆதியனைப் பார்த்துக்கிறேன். பசங்க பெரியவங்களா வளர்ற வரைக்கும் இப்படித்தான். கரெக்டா...” எனக் கணவரைப் பார்த்துச் சிரித்துவிட்டு ஜெஸ்லி, குழந்தைகளைக் கொஞ்சியபடியே தொடர்ந்தார்.

‘`முன்னால ரெண்டு பேருமே ரொம்ப போன் பயன்படுத்துவோம். இப்போ நிறைய குறைச்சுக்கிட்டோம். அதேபோல விளையாட, சாப்பாடு ஊட்டும்போதுன்னு எதுக்குமே குழந்தைகளுக்கு போன் கொடுக்கிறதில்லை. பசங்களுக்காக நிறைய ரைம்ஸ் கத்துக்கிட்டோம். கோபத்தைக் குறைச்சுக்கிட்டோம். இப்படிப் பசங்க வருகைக்குப் பிறகு, எங்க ரெண்டு பேருக்குள்ளும் நிறைய பாசிட்டிவ் மாற்றங்கள்” என்கிறார் பூரிப்புடன்.

தங்கள் காதல் அத்தியாயத்தைச் சொல்ல ஆரம்பித்தார் பரத், ``ரெண்டு பேரும் மியூச்சுவல் ஃபிரெண்ட்ஸ் மூலமாகத்தான் அறிமுகமானோம். நண்பர்களா பழகி, காதலர்களாகி, தம்பதியானோம். ஆனா, புரபோசல்னு ஒண்ணு எங்களுக்குள் நடக்கவேயில்லை. ரெண்டு பேருக்குமே நிறைய கோபம் வரும். சண்டை போடுவோம். பிறகு யாராச்சும் ஒருத்தர் விட்டுக்கொடுத்துப் போயிடுவோம். எப்போதுமே ரொமான்டிக்கா இருக்கிற தம்பதியை, சினிமால தான் பார்க்க முடியும். யதார்த்த வாழ்க்கையில தம்பதிக்குள் ரொமான்ஸ், சண்டை, விட்டுக்கொடுத்தல்னு எல்லாமே கலந்துதான் இருக்கணும். கல்யாணமாகி ஆறு வருஷமாகுது. நாங்க அப்படித்தான் இருக்கோம்’’ என்கிறார்.

“ரெண்டு பேரும் புரபோஸ் பண்ணலை!”

பரத் சொல்வதை ஆமோதித்துத் தலையாட்டும் ஜெஸ்லி, ``எனக்கு சினிமா மேல பெரிய ஆர்வமெல்லாம் இல்லை. `கண்டேன் காதலை’ படம்தான், பரத் நடிப்பில் என் ஆல்டைம் ஃபேவரைட். எங்களுக்குள் பொருந்திப் போகாத ஒரே விஷயம், ஷாப்பிங்தான். பரத் ஷூ பிரியர். தவிர டிரஸ், அக்சஸரீஸ்னு நிறைய வாங்கிக்குவிப்பார். கேட்டா, `ஆள் பாதி, ஆடை பாதிங்கிற மாதிரியான துறையில வேலை செய்றேன். அதனால், ஷாப்பிங் பண்ணித்தானே ஆகணும்’னு சொல்லுவார். இந்த விஷயத்துல மட்டும் இவருக்கு நான் நேரெதிர். எனக்கு கார் டிரைவிங் ரொம்பப் பிடிக்கும். இவர் டிராஃபிக்ல கார் ஓட்ட விரும்பமாட்டார். நான் கார் ஓட்ட, அவர் பக்கத்துல உட்கார்ந்துட்டு வர்ற அத்தருணம் எங்களுக்கு ரொம்பப் பிடித்தமானது. நான் நடிகர் விஜய்யின் பெரிய ரசிகை. அவரை இதுவரை பார்த்ததில்லை; பார்க்கணும்னு இவர்கிட்ட கேட்டதுமில்லை. இப்போ உங்க மூலமா அதை இவர்கிட்ட கேட்கிறேன்’’ எனக் கொஞ்சலாகச் சொல்கிறார். 

``என் சினிமா கரியர்ல `காதல்’ படம்தான் பென்ச் மார்க். அப்போ 19 வயசுல விளையாட்டுத் தனமா அந்தப் படத்துல நடிச்சேன். படம் ரிலீஸான பிறகு, தினமும் வாழ்த்து சொல்ல எங்க வீட்டுக்குப் பலர் வந்தாங்க. அப்போதான் எனக்குள் ஒரு நடிகரா பெரிய தாக்கம் உண்டாச்சு. பிறகு நிறைய படங்கள்ல நடிச்சு, வெற்றி, தோல்விகளைச் சரிசமமா பார்த்திருக்கேன். `555’ படத்தில் சிக்ஸ் பேக் வெச்சு நிறைய மெனக்கெட்டு நடிச்சேன். இப்படி நடிப்புக்காக எந்தச் சவாலையும் ஏற்க எப்போதும் தயார்தான். ஆனா, சில ஆண்டுகளாக ஹிட் படங்கள் மிஸ்ஸிங். சினிமா, மாதமானா சம்பளம் வர்ற துறை இல்லை. எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போய் நான் ஸ்ட்ரெஸ்ல இருக்கும்போது என் பெற்றோரும் ஜெஸ்லியும்தான், ‘அடுத்த புராஜெக்ட் நல்லபடியா அமையும். பாசிட்டிவ்வா யோசி. உன்னால முடியும்’னு எனக்கு நம்பிக்கை கொடுப்பாங்க. போலீஸ் ரோல்ல நடிக்கணும்ங்கிற என் நீண்ட நாள் ஆசை, ரிலீஸாகப்போற ‘காளிதாஸ்’ படம் மூலம் நிறைவேறியிருக்கு. ஷங்கர் சார் மற்றும் கெளதம் மேனன் சார் இயக்கத்துல நடிக்கணும்னு ஆசையிருக்கு. குழந்தைங்க வருகையால், எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்பறேன்”

அவர் நம்பிக்கையோடு சொல்லச் சொல்ல, ஆமோதிப்பதைப்போல குழந்தைகள் பரத் கன்னத்தில் தட்ட, நால்வர் முகத்திலும் அவ்வளவு நிறைவு.

-கு.ஆனந்தராஜ்

படங்கள்: பா.காளிமுத்து