மும்பையில் திரையிடப்படும் `சுப்ரமணியபுரம்’ | subramaniyapuram movie screen in mumbai

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (27/02/2019)

கடைசி தொடர்பு:17:50 (27/02/2019)

மும்பையில் திரையிடப்படும் `சுப்ரமணியபுரம்’

சசிகுமார் தயாரித்து, இயக்கி நடித்த `சுப்ரமணியபுரம்’ திரைப்படம் கடந்த 2008-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை அடிப்படையாக வைத்து `கேங்ஸ் ஆஃப் வசிப்பூர்’ என்ற படத்தை இரண்டு பாகங்களாகப் பாலிவுட்டில் இயக்கினார் அனுராக் காஷ்யப். அந்த இரு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சுப்ரமணியபுரம்

தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது `சுப்ரமணியபுரம்’ படம்தான் என அவர் பல இடங்களில் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் `சுப்ரமணியபுரம்’ வெளியான நாளன்று அனுராக்கிடமிருந்து அப்படத்தை சிலாகித்து ஒரு ட்வீட் வரும். இப்போது, மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள குளோபஸ் மாலில் நாளை மாலை 7.30 மணிக்கு சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட இருக்கிறது. அதில் இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு உரையாட இருக்கிறார்கள். இது குறித்து அனுராக் காஷ்யப் ட்விட்டரில், `மிஸ்பண்ணக்கூடாத படம். நான் கேங்ஸ் ஆஃப் வசிப்பூர் எடுக்க காரணமான படம்’ என்று பதிவிட்டுள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள சசிகுமார், ``பல வகைகளில் `சுப்ரமணியபுரம்’ படத்துக்குப் பாராட்டுகள் வருகின்றன. அதில் இது சிறந்தது. நன்றி அனுராக் ஜி’’ எனத் தெரிவித்திருந்தார்.  

சசிகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close