அடுத்த படம் என்ன?- சீனு ராமசாமி வெளியிட்ட தகவல் | My next movie will starting soon, says director seenu ramaswamy

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (27/02/2019)

கடைசி தொடர்பு:18:50 (27/02/2019)

அடுத்த படம் என்ன?- சீனு ராமசாமி வெளியிட்ட தகவல்

`தர்மதுரை' படத்துக்குப் பிறகு, சீனு ராமசாமி எடுத்திருக்கும் திரைப்படம் `கண்ணே கலைமானே'. உதயநிதி, தமன்னா நடித்திருக்கும் இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக சீனு ராமசாமி விஜய் சேதுபதியை வைத்து இயக்கி முடித்திருக்கும் `மாமனிதன்' படம் ரிலீஸூக்காகக் காத்திருக்கிறது. இந்தப் படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இளையராஜா, யுவனுடன் சேர்ந்து இசையமைத்திருக்கிறார். இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது. 

சீனு ராமசாமி

இதற்கிடையில் சீனு ராமசாமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டைம்லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர், இவரின் புதிய படத்தைத் தயாரிக்க இருக்கிறார். இந்த நிறுவனம் ஏற்கெனவே 'ஜாக்கிரதை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தை எடுத்தது.

இதுகுறித்து சீனுராமசாமியிடம் பேசியபோது, ``இந்த நிறுவனம் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க இவர்களுடன் வேலை பார்க்க சம்மதம் சொன்னேன். இவர்களுடன் சேர்ந்து படம் பண்ணுவதில் மகிழ்ச்சி. விரைவில் ஷூட்டிங் ஆரம்பமாகும். படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close