Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

நானி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஜெர்ஸி’ தெலுங்குப் படம் செம ஹிட்! வெற்றியின் சந்தோஷம் குறைவ தற்குள் தனது 25-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நானி. இவரது முதல் படத்தை இயக்கிய மோகனகிருஷ்ணா இப்படத்தை இயக்கவிருக்கிறார். தன் கரியரில் முக்கியமான இயக்குநர்கள் பலரையும் பட பூஜைக்கு அழைத்திருந்தார், நானி. இயக்குநர் வேணு ஸ்ரீராம் முதல் காட்சிக்கு கிளாப் அடிக்க, இயக்குநர் த்ரிநாதா ராவ் கேமராவை ஆன் செய்ய, இயக்குநர் அனில் ரவிப்புடி இப்படத்தின் முதல் காட்சியை இயக்கியிருக்கிறார். ‘வி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நானிக்கு ஜோடியாக அதிதி ராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். 25ம் ஜெயிக்கட்டும்!

இன்பாக்ஸ்

தாய்லாந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய மன்னருக்கு முடிசூட்டி மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது. கடவுளுக்கு இணையாக வைத்துப் போற்றப்பட்ட மன்னர் `பூமிபோல் அதுல்யாதேஜ்’ எழுபது ஆண்டுகளாகத் தாய்லாந்தை ஆட்சி செய்துவந்தார். 2016-ம் ஆண்டு மரணமடைந்த அதுல்யாதேஜின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் வேதனையில் இருந்த அவரின் ஒரே மகனான `மஹா வஹிலரங்கோன்’ இரண்டு ஆண்டுகளாக மன்னராக முடிசூடாமல் இருந்தார். பழைமையை மறக்காத தாய்லாந்தினர் மஹாவை முடிசூட வற்புறுத்தி சம்மதிக்கவைத்து இப்போது முடிசூட்டும் விழாவையும் கோலாகலமாக நடத்தியுள்ளனர். மக்கள் மன்னன்!

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், உலகளாவிய பிரபலங்களுக்கு ‘இன்ஸ்டாகிராமர்ஸ் ஆஃப் தி இயர் 2019’ என்ற பெயரில் விருதுகளை வழங்கியிருக்கிறது. இந்த விருதுகளில், இந்திய அளவில் அதிகம் ஃபாலோ செய்யப்படும் நபராக பிரியங்கா சோப்ரா அறிவிக்கப்பட்டுள்ளார். ‘ஸ்டோரி டெல்லர் அவார்டு’ நடிகை தீபிகா படுகோனுக்கும், ‘என்கேஜுடு அக்கவுன்ட்’ விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது. இன்ஸ்டாடினரி!

டிகர் ஆயுஷ்மான் குரானா இந்தியில் அறிமுகமான படம் ‘விக்கி டோனர்’. கருத்தரிப்புக்காக விந்து தானம் செய்யும் இளைஞனைப் பற்றிய இப்படம், தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். நாக சைதன்யா நடித்த ‘யுத்தம் சரணம்’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கிய கிருஷ்ணா மாரிமுத்து, இப்படத்தை இயக்குகிறார். ‘தாராளப் பிரபு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு, இசை அனிருத். அது ஏடாகூடபடமாச்சே!

இன்பாக்ஸ்

கேரளாவுக்குப் பிறகு தற்போது இயற்கைச் சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ஒடிசா மாநிலம்.  சுழற்றி அடித்த ஃபானி புயல் ஒடிசா மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடிச் செல்ல, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சமூக வலைதளங்களில் பலரும் உதவி செய்யக் குழு அமைத்துக் களமிறங்கியுள்ளனர். ஒடிசாவுக்கு கைகொடுப்போம்

ர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் ஈரானிய நடிகை கொல்ஷிஃப்தே ஃபர்ஹானி (Golshifteh Farahani), தற்போது ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் இயக்குநர்கள் ரூஸோ பிரதர்ஸ் தயாரிக்கும் ‘தாக்கா’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துவருகிறார். இப்படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகவிருக்கிறது. ரூஸோ பிரதர்ஸின் முந்தைய படங்களுக்கு ஸ்டன்ட் காட்சிகளை இயக்க உதவிய சாம் ஹர்க்ரே, இப்படத்தை இயக்குகிறார். இரான், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டு வரும் இதில், பாலிவுட் நடிகர்கள் ரந்தீப் ஹூடா, மனோஜ் பாஜ்பாய், பங்கஜ் திரிபாதி ஆகியோரும் நடித்துள்ளனர். பாலிவுட்டுக்கும் வாங்களேன்!

ரபரப்புக்குப் பெயர் போனவர் நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன். கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் மசூதி ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்குத்  துணை நின்றதோடு, இறுதி அஞ்சலி நிகழ்வில் புர்கா அணிந்து கலந்துகொண்ட புகைப்படம் ‘இமேஜ் ஆஃப் ஹோப்’ என வைரலானது. இப்போது 37 வயதான ஜெசிண்டாவுக்கும் தொலைக்காட்சித் தொகுப்பாளரான அவரின் பாய் ஃபிரண்ட்  க்ளார்க் கேபோர்டுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தங்களுக்குப்  பிறந்த பெண் குழந்தை அரோகாதான் தங்கள் காதலின் சின்னம் என நெகிழ்ந்துள்ளார் ஜெசிண்டா. வாழ்த்துகள் ஜெசி!

இன்பாக்ஸ்

ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களில் மிகவும் விரும்பப்படும் கேரக்டர்களில் ஒன்று சுபாக்கா. உடலெங்கும் முடியுடன், குரங்குபோல இருக்கும் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் பீட்டர் மேஹ்யூ சமீபத்தில் காலமானார். 1977-ம் ஆண்டு வெளியான ‘ஸ்டார் வார்ஸ் நியூ ஹோப்’ படத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்தக் கதாபாத்திரம். முகம் காட்ட முடியாது, குரல்கூடக் கிடையாது. வசனம் எல்லாம் கரகரத்த குரலில் ‘ஹியோயோயோ’ என்று கத்துவதுதான். ஆனாலும், இந்தக் கதாபாத்திரத்தை ஆக்‌ஷனும், எமோஷனுமாக நடித்து இத்தனை ஆண்டுகள் நினைவிலிருக்கும்படி செய்தவர் பீட்டர் மேயூ. 74 வயதான பீட்டர், 2014-ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் வீல்சேரில் இருந்தபோதும் ‘தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’ படத்தில் மீண்டும் ‘சுபாக்கா’ வேடமிட்டு நடித்திருந்தார். RIP சுபாக்கா!

இன்பாக்ஸ்

விலையுயர்ந்த கார்களுக்குப் பெயர்போன நிறுவனம் புகாட்டி. இந்நிறுவனம், மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் ‘La Voiture Noire’ என்ற காரை அறிமுகப்படுத்தியது. நம் கிரகத்தின் காஸ்ட்லியான கார் என்று கொண்டாடப்படும் இந்தக் காரை இப்போது யார் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. முதலில் ஃபோக்ஸ்வாகனின் முன்னாள் தலைவர் ஃபெர்டினண்ட் பியீச் இக்காரை வாங்கியதாக வதந்திகள் பரவின, தற்போது கால்பந்து வீரர் க்ரிஸ்டியானோ ரொனால்டோ இந்தக் காரை வாங்கியிருப்பதாக ஒரு பக்கம் செய்தி வர, இன்னொரு பக்கம் அவர் வாங்கவில்லை என்கிறார்கள். குத்துச்சண்டை வீரர் ஃப்ளாய்ட் மேவெதர் கூட இந்தக் காரை வாங்கியிருக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறார்கள். கார் டெலிவரி கொடுக்கும்போதுதான் ஓனர் யார் என்பதே தெரியும். அதற்கு நாம் இன்னும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டும். மைலேஜ் எவ்ளோ குடுக்கும்?