`அமைதியை நோக்கி பயணிப்போம்!' - நடிகர் மாதவன் வேண்டுகோள் | actor madhavan says about indo pak attack

வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (27/02/2019)

கடைசி தொடர்பு:21:13 (27/02/2019)

`அமைதியை நோக்கி பயணிப்போம்!' - நடிகர் மாதவன் வேண்டுகோள்

கடந்த பிப்ரவரி மாதம் 14 -ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 40 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இந்தச் சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாதவன்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 12 மிராஜ் ரக போர் விமானங்களில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தியது. பால்கோட் பகுதியில் செயல்பட்டுவந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப் பெரிய முகாம்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று இந்திய விமானப் படையின் விமானத்தைச் சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. இதனை இந்திய அரசு மறுத்திருந்தது. மேலும், மிக்-21 ரக விமானத்தில் சென்ற விமானி அபினந்தன் என்பவரையும் சிறைபிடித்து வைத்துள்ளது.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் மாதவன், "இந்த போர் தீவிரவாததுக்கு எதிராக நடப்பது. இரு நாடுகளுக்கு இடையே நடப்பதல்ல. மீடியாவால் இதை பூதாகரமாக்குவதை நிறுத்த முடியும். நாம் அனைவரும் பொறுப்புடன் அமைதியை நோக்கி பயணிப்போம்' என்று பதிவிட்டுள்ளார்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close