இந்திய கமாண்டோவின் பயோபிக்கை தயாரிக்கும் மகேஷ் பாபு! | mahesh babu produces indian commando's biopic

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (28/02/2019)

கடைசி தொடர்பு:17:05 (28/02/2019)

இந்திய கமாண்டோவின் பயோபிக்கை தயாரிக்கும் மகேஷ் பாபு!

`பரத் அனே நேனு' படத்தைத் தொடர்ந்து நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் `மஹரிஷி'. இது அவருக்கு 25-வது திரைப்படம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் உருவாகி இருக்கும் இப்படம் ஏப்ரல் 25-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு பயோபிக் படத்தை தயாரிக்க இருக்கிறார், மகேஷ்பாபு.

மகேஷ் பாபு

நவம்பர், 2008-ம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து பல உயிர்களைக் காப்பாற்றி நாட்டுக்காக தன் உயிரைத் தியாகம் செய்த கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கையைதான் படமாக எடுக்க இருக்கிறார்கள். தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு 'மேஜர்' எனப் பெயரிட்டுள்ளனர். இதில் சந்தீப் உன்னிகிருஷ்ணன் வேடத்தில் இளம் நடிகர் அத்வி ஷேஷ் நடிக்க சசிகிரண் டிக்கா என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தை மகேஷ்பாபு தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து சோனி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019 சம்மரில் தொடங்கி 2020-ல் வெளியிட இருக்கிறார்கள். புல்வாமா தாக்குதல், அதற்கு இந்திய ராணுவத்தின் பதிலடி, இந்திய விமானி அபிநந்தன் சிறைப்பிடிப்பு என நடந்துகொண்டிருக்கும் சூழலில் இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.     

மகேஷ்பாபு ட்வீட்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close