மாண்டலின் ஶ்ரீனிவாஸ் நினைவாக தேவி ஸ்ரீ பிரசாத் உருவாக்கியுள்ள ஃப்யூஷன் பாடல்! | devi sri prasad composes a fusion song for padma sri mandolin srinivas

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (28/02/2019)

கடைசி தொடர்பு:19:10 (28/02/2019)

மாண்டலின் ஶ்ரீனிவாஸ் நினைவாக தேவி ஸ்ரீ பிரசாத் உருவாக்கியுள்ள ஃப்யூஷன் பாடல்!

உலக புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதையான பத்மஸ்ரீ மாண்டலின் ஶ்ரீனிவாஸ் நினைவாக அவரின் 50-வது பிறந்தநாளை (பிப்ரவரி 28) முன்னிட்டு  அவரது சிஷியனும் பிரபல இசையமைப்பாளருமான தேவி ஸ்ரீ பிரசாத் தனது குருவுக்குப் பிடித்த கடவுளான அனுமனை போற்றும் `அனுமன் ஷாலிஷா' பாடலை ஃப்யூஷனாக உருவாக்கியுள்ளார். 'ஜெய் பஜ்ரங்பலி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து பின்னணிப் பாடகரான ஷங்கர் மகாதேவனும் பாடியுள்ளார். மேலும், கிராமி விருது பெற்ற பத்மபூஷண் விக்கு விநாயக் ராம், டிரம்ஸ் சிவமணி, கஞ்சிரா செல்வ கணேஷ், மேண்டலின் ஸ்ரீனிவாசனின் சகோதரரான ராஜேஷ் ஆகியோர் இந்தப் பாடலுக்காக ஒன்றிணைந்து பணிபுரிந்துள்ளனர்.

மாண்டலின் ஶ்ரீனிவாஸ்

இந்தப் பாடலை இன்று மாலை (பிப்.28) சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ள `தி கிரேட் மேண்டலின் ஷோ' நிகழ்ச்சியிலும் நாளை மறுநாள் (மார்ச் 2) சிங்கப்பூரில் எஸ்பிளண்ட் அரங்கில் நடைபெற உள்ள 'The Mandolin & Beyond' என்ற நிகழ்ச்சியிலும் பர்ஃபார்ம் செய்ய உள்ளனர். முதலாம் ஆண்டு நினைவாக தேவி ஸ்ரீ பிரசாத் உருவாக்கியிருந்த `குருவே நமஹ' என்ற பாடல் பிரபலமானதைத் தொடர்ந்து இந்தப் பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close