`ஓவியா வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்கப் போறோம்!’ - `90 எம்.எல்.' படத்துக்குத் தடைகோரும் காந்திய அமைப்பு | Gandhi world foundation seeks ban on oviya's 90ML movie

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (28/02/2019)

கடைசி தொடர்பு:21:30 (28/02/2019)

`ஓவியா வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்கப் போறோம்!’ - `90 எம்.எல்.' படத்துக்குத் தடைகோரும் காந்திய அமைப்பு

டீசர் வெளியான நிமிடம் தொட்டு புகை பிடித்தல், மது அருந்துதல், ஆபாசமான உரையாடல் போன்ற காட்சிகளுக்காக மக்களிடமும் சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது, 90 எம்.எல்.,

ஓவியா

ஓவியா நடிப்பில் மார்ச் முதல் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை எதிர்த்து லேட்டஸ்ட்டாகக் களம் இறங்கியிருக்கிறது, `காந்திய வேர்ல்டு ஃபவுண்டேஷன்' எனப்படும் காந்திய அமைப்பு. தமிழக உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி, சென்னை மாநகர காவல் ஆணையர், சென்சார் போர்டு ஆகியோருக்கு இந்த அமைப்பு எழுதியிருக்கும் கடிதம் குறித்து அமைப்பின் நிறுவனர் எம்.எல் ராஜேஷிடம் பேசினோம்.

எம்.எல் ராஜேஷ்

``புகை, மது போன்ற பழக்க வழக்கங்கள்ல இருந்து எல்லாருமே விடுபடணும்கிற கோரிக்கை உலகளாவிய அளவுல ஓங்கி ஒலிச்சிட்டிருக்கு. இப்படியொரு சூழல்ல `ஆண்கள் என்ன ஆண்கள், பொண்ணுங்களே இப்ப இதையெல்லாம் சகஜமா பண்றாங்க; இதுல தப்பென்ன'ங்கிற ரீதியில காட்சிகள் அமைச்சிருக்காங்க. 18 வயசுக்கு மேற்பட்டவங்கதான் பார்ககலாம்கிறாங்க. ஆனா படத்தைப் பார்க்கிற 18 வயசுப் பொண்ணுகள்ல பத்துப் பேர்ல ஆறு பேராவது அதுவரைக்கும் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாம இருந்தா, இந்தப் படத்தைப் பார்த்துட்டு தவறான பாதைக்குப் போவாங்கங்கிறது எங்க கணிப்பு. அதனாலதான் படத்துக்குத் தடை கேட்கிறோம்.

ஓவியாங்கிற அந்தப் பொண்ணுக்கு பிக் பாஸ் மூலம் நல்ல பேர் கிடைச்சது. இந்தப் படம் மூலம் அந்தப் பெயரைக் கெடுத்துகிட்டாங்க. தான் நடிச்சிருக்கிற சர்ச்சைக்குரிய காட்சிகள் வெளிவராம தடுக்க அவங்களே நடவடிக்கை எடுக்கணும். இல்லாட்டி, அவங்க வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருக்கவும் நாங்க தயாரா இருக்கோம்'' என எச்சரித்து முடிக்கிறார் ராஜேஷ்.


[X] Close

[X] Close