தோனி ரெஃபரன்ஸுடன் களமிறங்கும் ஹாக்கிப் படை! - `நட்பே துணை’ டிரெய்லர் | Natpe Thunai Official Trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 21:06 (28/02/2019)

கடைசி தொடர்பு:21:10 (28/02/2019)

தோனி ரெஃபரன்ஸுடன் களமிறங்கும் ஹாக்கிப் படை! - `நட்பே துணை’ டிரெய்லர்

`ஹிப்ஹாப் தமிழா ஆதி’ நடித்த `நட்பே துணை’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆதி


இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படம் நட்பே துணை. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டி.பார்த்திபன் தேசிங்கு. ஆதிக்கு ஜோடியாக நடிக்கிறார் அனகா. படத்துக்கு ஹிப் ஹாப் ஆதியே இசையமைக்கிறார். டிமாண்டி காலனி மற்றும் இரவுக்கு ஆயிரம் கண்கள் புகழ் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஃபென்னி ஒலிவர் எடிட்டிங் செய்துள்ளார். ஹாக்கியை அடிப்படையாகக்கொண்டு உருவானாலும் குடும்பம், நட்பு, காதல், நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருக்கிறது. நட்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் படம் தயாராகியுள்ளது.

நட்பே துணை

யூடியூப் சேனல்களில் நடித்து வரும் பலர் படத்தில் நடித்திருக்கிறார்கள். `ப்ளாக் ஷிப்’ விக்னேஷ் காந்த், சுட்டி அரவிந்த், புட் சட்னி ராஜ்மோகன், ‘எரும சாணி’ புகழ் விஜய், பிஜிலி ரமேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், வினோத் மற்றும் அஸ்வின் ஜெரோமி ஆகியோரும் நடிக்கிறார்கள். நீண்ட எதிர்பார்ப்புக்குப்பிறகு படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

 

 

 


[X] Close

[X] Close