விஜய் சேதுபதி, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக்கு கலைமாமணி விருது - தமிழக அரசு அறிவிப்பு! | TN govt announced kalaimamani award for the years 2011-18

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (01/03/2019)

கடைசி தொடர்பு:07:00 (01/03/2019)

விஜய் சேதுபதி, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக்கு கலைமாமணி விருது - தமிழக அரசு அறிவிப்பு!

இலக்கியம் மற்றும் கலைத்துறையினரை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படும் தமிழக அரசின் கலைமாமணி விருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அறிவிக்கப்படாமல் இருந்த இந்த விருதை அறிவிக்கக்கோரி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அவ்வப்போது முதலமைச்சரைச் சந்திக்கும்போது வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் சேதுபதி

நடிகர்களில் முக்கியமாக விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, சந்தானம், சசிகுமார், பிரசன்னா, பாண்டியராஜன், பொன்வண்ணன், தம்பிராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீகாந்த், பாண்டு, பிரியாமணி, நளினி, காஞ்சனா தேவி, சிங்கமுத்து ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா

கவிஞர் யுகபாரதி, இயக்குநர்களில் ஹரி, சுரேஷ் கிருஷ்ணா, டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர்க்கும், இசையமைப்பாளர்களில் யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி உள்ளிட்டோர்க்கும், பாடகர்களில் உன்னிமேனன், பரவை முனியம்மா, வேல்முருகன், கானா உலகநாதன், கானா பாலா உள்ளிட்டோர்க்கும், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ரவிவர்மன் ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சினிமா கலைஞர்கள் கலைமாமணிசினிமா கலைஞர்கள் கலைமாமணி

மூத்த பத்திரிகையாளர் மற்றும் தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளர் அமரர் `பிலிம் நியுஸ்’ ஆனந்தனுக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

kalaimamanikalaimamani

பழம்பெரும் திரைப்பட பாடகி ஜானகிக்கு 2016ம் ஆண்டுக்கான எம்.எஸ். சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், அதே ஆண்டுக்கான பாரதி விருது பாடலாசிரியரும் கவிஞருமான புலவர் புலமை பித்தனுக்கு   அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   


[X] Close

[X] Close