சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி காலமானார்! | Veteran actress Sitalakshmi passed away

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (01/03/2019)

கடைசி தொடர்பு:08:00 (01/03/2019)

சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி காலமானார்!

மிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

நடிகை சீதாலட்சுமி

கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நடித்து புகழ்பெற்றவர் சீதாலட்சுமி. தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரு ஜாம்பவான்களோடும் நடித்தவர். எம்.ஜி.ஆர் நடித்த `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் நம்பியாரின் சகோதரியாக நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். மேலும்,`அன்னமிட்ட கை', `ஆண்டவன் கட்டளை', `தாய் மேல் ஆனை', `அன்புக் கரங்கள்', `கர்ணன்', `வீரபாண்டிய கட்டபொம்மன்', ரத்தக் கண்ணீர்', ரஜினிகாந்த் உடன் `அன்புக்கு நான் அடிமை', தனுஷ் உடன் `சீடன்',  இந்தியில் திலிப் குமாருடன் `இரும்புத் திரை'  உட்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி உடன்

பர்மாவில் பிறந்தவர் சீதாலட்சுமி. பின்னர் தமிழகம் வந்து, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றார். சினிமாவில் மட்டுமின்றி நாடகங்களிலும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்டோருடன் நடித்தார். தனது நடிப்புத் திறமைக்காக `தந்தை பெரியார் விருது’ பெற்றவர். மேலும், கலைமாமணி, கலைச்செல்வி உள்ளிட்ட பட்டங்களையும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் இருந்து பெற்ற பெருமைக்குரியவர். 

பெரியார் உடன்

கடந்த சில நாள்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சீதாலட்சுமி. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இவரது மகள் ராதிகா, தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகப் பணியாற்றிவருகிறார். 

விருது பெற்றபோது

நடிகை சீதாலட்சுமியின் உடல், சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பம், எம்.ஆர் பள்ளி அருகிலுள்ள அவரது மகளின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 
 


[X] Close

[X] Close