Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் அட்லி படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்கக் குழந்தைகளைக் கவரும்விதமாக  ஒரு ஃபேன்டஸி படமொன்றில் நடிக்கவிருக்கிறார் விஜய். தமிழில் அதிகம் கையாளப்படாத சூப்பர் ஹீரோ ஜானரில் தயாராகவிருக்கும் இப்படத்தை, ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாராம். தமிழ்மேன்!

இன்பாக்ஸ்

சமீரா ரெட்டி முன்னணி நாயகியாக இருக்கும்போதே 2013க்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கைக்குச் சென்றவர் சமீபத்திய பேட்டியொன்றில் ‘என் திரைவாழ்வில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலரும் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். சினிமா, பெண்களுக்குப் பாதுகாப்பான இடமில்லை. நான் கர்ப்பமாக இருந்தபோதுகூட என்னைப் படுக்கைக்கு அழைத்தார்கள்’  என்று கோபமாகப் பேசியிருக்கிறார். நிஜம்...நிதர்சனம்!

தமிழில் தற்போது, ‘கேம் ஓவர்’ படத்தில் நடித்துவரும் டாப்ஸி, அடுத்து ஜெயம்ரவி ஜோடியாக `என்றென்றும் புன்னகை’ அஹமத் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார், என்னதான் கோலிவுட் பக்கம் வந்தாலும், பாலிவுட்டை விட முடியுமா, அங்கும்  ‘சாந்த் கி ஆங்’ எனும் படத்தில் அறுபது வயது மூதாட்டியாக நடிக்கிறார்.  டாப்ல டாப்ஸி!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் ஆண்டுதோறும் நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் ‘மெட் காலா’ நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதில் முதன்முறையாக ஜோடியாகக் கலந்துகொண்டார்கள், நிக் ஜோனாஸ் - பிரியங்கா சோப்ரா தம்பதி. சிறப்பு விருந்தினர்கள் வித்தியாசமான காஸ்ட்யூம்களில் அணிவகுக்க வேண்டும் என்பதுதான் இவ்விழாவின் தீம். அதனால் விநோதமான தலையலங்காரத்தோடு தோன்றினார் பிரியங்கா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

அது யோகிபாபுவின் ஹேர்ஸ்டைல் போல இருக்கிறது என நெட்டிசன்கள் மீம்களாகப் போட்டுக் கலாய்க்க... அவற்றையெல்லாம் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொண்டார் பிரியங்கா! இதுவும் ட்ரெண்டு ஆகலாம்!

ஐயாயிரம் கிலோ அளவுக்குக் குப்பைகளை அள்ளியிருக்கிறார்கள்... எங்கே தெரியுமா? உலகின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான எவரெஸ்டில். சென்ற மாதம் ஏப்ரல் தொடங்கி எவரெஸ்ட்டை சுத்தப்படுத்தும் வேலைகளில் இறங்கியது நேபாள அரசு... இதற்காக 23 மில்லியன் நேபாள ரூபாய் செலவில் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மலையேற்றத்தில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொட்டிவைத்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், சமையல் கழிவுகள், பீர் பாட்டில்கள், மலக்கழிவுகள் என ஏகப்பட்ட குப்பைகளை எடுத்திருக்கிறார்கள்.  ‘எவரெஸ்ட் உலகின் மிக உயரமான குப்பைத்தொட்டியாக மாறிவிடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்’ என்றும் சொல்லியிருக்கிறது நேபாள அரசு.  இப்படிக் குப்பை கொட்டக்கூடாது!

`அர்ஜூன் ரெட்டி’யின் இந்தி ரீமேக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஷாகித் கபூர். பாத்திரத்தை உணர்ந்து நடிக்கவேண்டும் என உடல் எடையைக் கடுமையாகக் குறைத்திருக்கிறார். கூடவே இன்றைய கல்லூரி மாணவர்களின் உடல்மொழியைத் தெரிந்துகொள்வதற்காக டெல்லியில் உள்ள கல்லூரி மாணவர்களோடு தங்கியிருந்து, அவர்களுடைய உடைகளை அணிந்து வாழ்ந்து தன்னைத் தயார்படுத்திக்கொண்டு வருகிறாராம்! ஓவர் டெடிகேஷனா இருக்கே!

இன்பாக்ஸ்

பல சர்ச்சைக்குரிய செய்திகளின் பேசுபொருளாகத் தன்னை மாற்றிக்கொள்பவர், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். சமீபத்தில், பாகிஸ்தான் கொடியை ஏந்தி நிற்கும் தனது படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ‘பாகிஸ்தானில் நல்ல மனிதர்கள்’ என்ற கான்செப்டில் பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். பாலிவுட் படமான ‘தாரா 370’ல் ராக்கி சாவந்த் பாகிஸ்தான் பெண்ணாக நடிக்கிறார்... அதற்குத்தான் இந்த ஸ்டன்ட்! ராக்கின்னாலே விளம்பரம்தான்!

இன்பாக்ஸ்

பல நாள்களாகவே டைகர் ஷெராஃப்புக்கும் திஷா பட்டாணிக்கும் இடையே காதல் எனக் கிசுகிசுத்துக்கொண்டிருந்தது பாலிவுட். பிறகு இருவருக்கும் பிரேக் அப் என்றனர். ஆனால் இரண்டு தரப்புமே சைலன்ட் மோடில் இருக்க, இப்போது ‘‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்... இப்போதைக்கு எந்த அவசரமும் இல்லை... எல்லாமே ஸ்லோ மோஷனில்தான் போகிறது’’ என சூசகமாகப் பேசியிருக்கிறார் டைகர் ஷெராஃப். இருக்கு ஆனா இல்ல!

உலக அளவில் சமூகவலைதளங்களில் மிக அதிகம் பேரால் பின்தொடரப்படும் அரசியல் வாதிகள் பட்டியலில் டொனால்ட் ட்ரம்ப்பைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார் பிரதமர் மோடி. நரேந்திர மோடியை ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மொத்தமாக 11 கோடிப்பேர் பின்தொடர்கிறார்கள். முதலிடத்தில் இருப்பவர் பராக் ஒபாமா. அவரை 18 கோடிப்பேர் பின்தொடர்கிறார்கள். இதற்கிடையே டைம் இதழ் இந்தியப் பிரதமர் மோடியை அட்டைப்படத்தில் வெளியிட்டு ``இந்தியாவின் டிவைடர் இன் சீஃப்’’ என்று தலைப்பிட்ட கட்டுரை யையும் எழுதியுள்ளது. ‘பிரித்தாளும் இந்தத் தலைவரை இந்தியாவால் இன்னும் ஐந்தாண்டுகள் தாங்கிக்கொள்ள முடியுமா?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளது.

இன்பாக்ஸ்

எப்படியும் லைம்லைட்டில்...

பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம் தன்னுடைய காஸ்ட்லி காரில் லண்டனை உலா வரும்போது அவரைப் படமெடுத்து சமூகவலை தளத்தில் போட்டுள்ளார் ஒரு ரசிகர். அந்தப் படத்தில் பெக்கம் மொபைல் போன் பயன் படுத்துவது தெளிவாகத் தெரிந்ததால் பெக்கம் மீது வழக்கு பாய்ந்து சிக்கலில் சிக்கிக்கொண்டார். இந்த வழக்கின் தீர்ப்பாக, பெக்கமின் லைசென்ஸில் 6 பன்ச் போட்டுள்ளார் நீதிபதி. ஏற்கெனவே பலமுறை, வேகமாகச் சென்றதற்காகவும், மொபைல் பயன்படுத்தியதற்காகவும் கோர்ட்டிடம் சிக்கியிருக்கும் பெக்கமுக்கு நீதிபதி கூடுதலாக 76,000 அபராதம் மற்றும் 6 மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடை விதித்திருக்கிறார்கள்.  ரெட்கார்டு!