யோகிபாபு, கருணாகரன் நடிக்கும் `பன்னிகுட்டி' - லைகா நிறுவனம் தயாரிப்பு | yogi babu's next film titled pannikutty

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (01/03/2019)

கடைசி தொடர்பு:13:15 (01/03/2019)

யோகிபாபு, கருணாகரன் நடிக்கும் `பன்னிகுட்டி' - லைகா நிறுவனம் தயாரிப்பு

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஜானர் பாப்புலராகும். அந்த வகையில் இப்போது விலங்குகளை வைத்து எடுக்கும் படங்கள் அதிகமாகி இருக்கின்றன. `கொரில்லா', `மான்ஸ்டர்', `நீயா 2' உள்ளிட்ட படங்கள் உதாரணம். இதைத் தொடர்ந்து, பன்றியை வைத்து உருவாக இருக்கும் படம் `பன்னிகுட்டி'. யோகிபாபு, கருணாகரன், சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, `கலக்கப்போவது யாரு' ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

யோகிபாபு

`கிருமி' படத்தை இயக்கிய அனுசரண் முருகையா இந்தப் படத்தை இயக்குகிறார். `ஆண்டவன் கட்டளை', `49-0', `கிருமி' ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கிருஷ்ணகுமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க சதீஷ் முருகன் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். யோகி பாபுவின் நடிப்பில் `கொரில்லா', `மிஸ்டர் லோக்கல்', `ஜாம்பி', `வாட்ச் மேன்', `கூர்கா' உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close