Published:Updated:

“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது!”

“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது!”

“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது!”

“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது!”

“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது!”

Published:Updated:
“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது!”

“மனிதன் நம்பிக்கைக்கு உரியவனாக ஒவ்வொரு கணமும் வாழ வேண்டும். துயரிலிருந்து தன்னையும், சக மனிதனையும் மீட்டெடுக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். ‘சிறகு’ அப்படியான ஒரு மீட்டெடுத்தல் தான்.” - நம்பிக்கையும், உற்சாகமுமாகப் பேசுகிறார் குட்டி ரேவதி. கவிஞர், களப்பணியாளர், கட்டுரையாளர், பாடலாசிரியர், திரைக்கதையாளர் என நெடிய பயணத்துக்குப்பின்  ‘சிறகு’ படம் மூலம் இயக்குநர் கனவை எட்டிப் பிடித்திருப்பவரிடம் பேசினேன்.

“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது!”

“படத்தின் தலைப்பே கதை சொல்கிறதே... எப்படி உருவாகியிருக்கிறது படம்?”

“90 பேரிடம் என்னுடைய கதையைச் சொல்லியிருப்பேன். பிறகுதான், மாலா மணியன் அறிமுகமானார். மீடியா, சினிமா என 40 ஆண்டுகளாகப் பயணிப்பவர். ‘சிறகு’ படத்தின் ஒன்லைனைக் கேட்டவர், ‘நல்லா இருக்கு; நாம பண்ணலாம். எழுதிட்டுச் சொல்லுங்க’ என்றார். சில வாரங்களில் கதையை முடித்துக் கொடுத்தேன். நன்றாகத் தேர்வெழுதியபின், முடிவுக்காகக் காத்திருக்கும் பள்ளி மாணவியின் பரவசத்துடன் இருந்தேன். ஒரே இரவில் கதையைப் படித்து முடித்தவர், மறுநாள் காலை ‘இது உற்சாகம் தரக்கூடியதா இருக்கு, படமாக்கலாம்’ என்றார். அன்றைய விடியலில்தான் எங்கள் ‘சிறகு’ தொடங்கியது. அவரது நேர்த்தி யான திட்டமிடல், படத்தை விரைந்து முடிக்க உதவியது. சினிமா குறித்துக் கேள்விப்பட்டிருந்த அத்தனை கற்பிதங்களையும் என் தயாரிப்பாளரும் படக்குழுவினரும் உடைத் தெறிந்தார்கள்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது!”

“படத்தில் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்?”

“ஹரிகிருஷ்ணனும், அக்‌ஷிதாவும் படத்தில் நடித்துள்ளனர். ‘மரியான்’ படத்திலிருந்தே ஹரியைத் தெரியும். இயல்பான வசீகரம் கொண்டவர். இசைக் கலைஞராக இப்படத்தில் நடித்துள்ளார். பல ஆடிஷன்கள், பல தேடல்களுக்குப் பிறகு ‘அருவி’ இயக்குநர் அருண்பிரபு மூலம் அக்‌ஷிதா அறிமுகமானார்.  தமிழ் பேசத் தெரிந்தவர். இருவரும் அபாரமான திறமைசாலிகள். டாக்டர் வித்யா மற்றும் நிவாஸ்  இருவரும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

 இந்த நால்வர்தான் முதன்மைக் கதாபாத்திரங்கள்.”

“கவிஞர் குட்டிரேவதியிடமிருந்து ‘ஹீரோ - ஹீரோயின்’ என வழக்கமான கமர்ஷியல் படமா?”

“சினிமா ஒரு மைய ஊடகம். அது வேறொருவருக்கானது என நாம் நினைத்துக்கொள்கிறோம். சினிமா, நம்மை நோக்கி, ‘நீ என்னைக் கொண்டு சமூகத்திற்கு என்ன சொல்லப்போகிறாய்?’ என்பதைத்தான் கேட்கிறது. அதற்காக அது சில கட்டமைப்புகளை வைத்திருக்கிறது. அந்தக் கட்டமைப்புக்குள் நமக்கான  சினிமாவை வார்த்தெடுக்கும் சவால் நமக்கானது. கமர்ஷியல் படம்தான்.  ஆனால், பொறுப்புணர்வுடன் கூடிய சினிமாவாக எடுத்தி ருக்கிறோம். கமர்ஷியல் சினிமாக்கள்தாம் நெருக்கமாக வெகுமக்களுடன் உரையாடுவதற்கு இருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு.  சினிமா என்கிற வணிகத்தளத்தின் சவால்களை, நம் திறமை, வெளிப்பாடு கொண்டு எவ்வளவு நேர்மையுடனும், நேர்த்தியுடனும் கையாள்கிறோம் என்பதே முக்கியம்.”

“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது!”

“உங்களது கதையின் திரைவடிவத்தை உங்களது குழு எந்தளவிற்கு சாத்தியப்படுத்தியிருக்கிறது?”
 
“படத்தின் இரண்டு சிறகுகள் இசையமைப்பாளர் அரோல் கொரோலியும், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாஜார்ஜியும்தான். படப்பிடிப்பு தொடங்குவதிலிருந்து முடியும்வரை யானை பலத்துடன் வேலை செய்தார், ஒளிப்பதிவாளர். அந்த உழைப்பைக் கச்சிதமாக எடிட் செய்திருக்கிறார், அருண்குமார். அரோலின் ஒவ்வொரு பாடல் பதிவு முடிந்த பிறகும் அலுவலகத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். குழந்தை பிரசவிப்பதைப்போல பாடல்களைக் கொடுத்திருக்கிறார், அரோல். அவரது இசையை இந்தத் தலைமுறையினருக்கான இசையாகப் பார்க்கிறேன்.”

- சக்தி தமிழ்ச்செல்வன்