"நான் இயக்கும் படத்துக்கு அதர்வா ஹீரோவாக இருப்பார்" - ஆர்.ஜே.பாலாஜி | rj balaji speech in boomerang press meet

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (02/03/2019)

கடைசி தொடர்பு:08:48 (02/03/2019)

"நான் இயக்கும் படத்துக்கு அதர்வா ஹீரோவாக இருப்பார்" - ஆர்.ஜே.பாலாஜி

'இவன் தந்திரன்' படத்துக்குப் பிறகு, இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், 'பூமராங்' , மார்ச் 8-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, "நான் நடிச்சு வெளியாகி இருக்கிற 'எல்.கே.ஜி' படம் உருவானது 'பூமராங்' பட செட்டுலதான். 'எல்.கே.ஜி' ஸ்கிரிப்டை நான் எழுதணுங்கிற எண்ணத்தை விதைச்சது அதர்வாதான். அதுக்கு அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன். நான் அவருக்கு இன்னொரு கதைகூட சொன்னேன். சீக்கிரமே நான் அவரை இயக்குவேன்னு நினைக்கிறேன். நான் வொர்க் பண்ணதிலேயே எனக்கு பிடிச்ச இயக்குநர் கண்ணன் சார்.

ஆர்ஜே.பாலாஜி

படங்கள்ல சொல்ற மாதிரி எங்களுக்கான உறவு, மோதல்லதான் ஆரம்பிச்சது. அவர் எடுத்த படத்தை நான் விமர்சனம் பண்ணியிருந்தேன். போன் பண்ணி அவர் பேசுனது அவ்வளவு இனிமையா இருந்தது. நானும் போனை ரெண்டு காதுலையும் மாத்தி வெச்சு கேட்டுட்டு இருந்தேன். கடைசியா, 'சார் இந்தக் காலை நான் ரெக்கார்ட் பண்ணியிருக்கேன்'னு சொன்னேன். உடனே, 'பிரதர் என்ன பிரதர்'னு சொல்லிட்டு அந்த கால் கட்டாகிடுச்சு. அப்புறம், நான் நடிக்க ஆரம்பிச்ச பிறகு, 'இவன் தந்திரன்' ஸ்கிரிப்ட் சொல்லி ஒன்னா வொர்க் பண்ணோம். இந்தப் படத்துல எனக்கு முக்கியமான ரோல் கொடுத்திருக்கார். நதிநீர் இணைப்பு, காவிரிப் பிரச்னைனு நாட்டுல நடக்கிற முக்கியமான பிரச்னைகளைப் பேசியிருக்கார் கண்ணன் சார். படத்தின் எடிட்டர் செல்வா பத்தி பேசியே ஆகணும். 'பரியேறும் பெருமாள்' படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைச்சாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை " என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close