யூடியூபில் வெளியானது `ரெளடி பேபி'யின் மேக்கிங் வீடியோ! | Making video of Rowdy Baby released on YouTube

வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (02/03/2019)

கடைசி தொடர்பு:17:01 (02/03/2019)

யூடியூபில் வெளியானது `ரெளடி பேபி'யின் மேக்கிங் வீடியோ!

யூடியூபில் பதிவேற்றப்பட்ட நாள் முதல் இன்று வரை பார்வையாளர்களைத் தன் வசம் இழுத்துக்கொண்டிருக்கிறது 'ரெளடி பேபி' பாடல். பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'மாரி-2' படத்தின் இந்தப் பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்தப் பாடலைப் பொறுத்தவரையில் பாடகி தீ உடன் தனுஷ் எழுதிப் பாட, பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இயல்பிலேயே நல்ல நடனமாடக்கூடிய தனுஷும் சாய் பல்லவியும் இந்த முறை யுவனின் மெட்டிலும், பிரபு தேவாவின் நடன அமைப்பிலும் ஆடப்போகிறார்கள் என்றதுமே ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். அவர்கள் எதிர்பார்ப்புக்குச் சற்றும் குறையாமல் விஷுவலாக அசத்தியிருந்தது அந்தப் பாடல்.

ரெளடி பேபி

ஏற்கெனவே 250 மில்லியன் வியூக்களைப் பெற்று 'ஒய் திஸ் கொலவெறி?' பாடலின் ரெக்கார்டை தகர்த்தது 'ரெளடி பேபி'.  மேலும் பிரபல அமெரிக்க ஊடகமான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் குழுமத்தின் `பில்போர்ட்'  பட்டியலிலும் இடம்பிடித்தது. சர்வதேச அளவில் ரேடியோ, ஆன்லைன் ஆல்பங்கள், யூடியூப் என வெவ்வேறு ஊடகங்களில் டாப் இடம்பிடித்த பாடல்களின் தரவரிசைப் பட்டியல் அது.

அந்த வகையில் யூடியூபில் வெளிவந்த வீடியோ பாடல்கள் தரவரிசையில் இந்தப் பாடல் பில்போர்டின் டாப் ஐந்து பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்தது. இந்த நிலையில், தற்போது அந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் பாலாஜி மோகனும், நாயகி சாய் பல்லவியும், இந்தப் பாடலின் ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கும் இந்த வீடியோவுக்கும் உலக அளவில் நல்ல வரவேற்பு இருக்கும் என படக்குழுவினர் நம்புகிறார்கள்.


[X] Close

[X] Close