`தயாரிப்பாளர் சங்கத்துலயே அவ்ளோ பிரிவு இருக்கு!’ - சேரன் குற்றச்சாட்டு | cheran about unity among producers

வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (02/03/2019)

கடைசி தொடர்பு:19:36 (02/03/2019)

`தயாரிப்பாளர் சங்கத்துலயே அவ்ளோ பிரிவு இருக்கு!’ - சேரன் குற்றச்சாட்டு

இந்த வாரம் `தடம்’, `90ml’, `தாதா 87’, `அடடே’ என நான்கு தமிழ்ப் படங்களுடன் சேரன் இயக்கியுள்ள `திருமணம்’ படமும் வெளியாகியுள்ளது.

சேரன்

இப்படம் குறித்து சேரன் நம்மிடம் பேசும்போது, ``தமிழ் சினிமாத் துறையில் படங்களைத் தயாரிப்பதைவிட படங்களை வெளியிடுவது, நல்ல திரையரங்குகள் கிடைப்பதில் தயாரிப்பாளர்கள் சிரமப்படுவது பற்றி குறிப்பிட்ட அவர், ``ரிலீஸ், டிஸ்ட்ரிபுஷன் கஷ்டமாத்தான் இருக்கு. இங்கே பலம்கொண்டவர்களும், பெரிய நடிகர்கள், இயக்குநர்களும் படங்கள் தயாரிப்பதற்கொரு வாய்ப்பாகத்தான் திரையுலகத்தை பயன்படுத்துறாங்க. இதுல இடைப்பட்ட காலத்துல திரையரங்குகளை ஃபில்லப் பண்றதுக்கும் டெக்னிஷியன்கள் வருமானம் உருவாக்கிக்க, திரையரங்குகள் பணம் பண்ணத்தான் சின்ன படங்கள் உபயோகமாயிருக்கிறது.

சின்ன படங்களுக்கு ஏற்ற திரையரங்குக் கிடைக்கிறதில்லை. சென்னையில் நம்ம படம் எங்க ஓடுதுனு தேட வேண்டியிருக்குது. ஒரு படத்துக்கு ஒரு ஷோ, ரெண்டு ஷோ குடுக்குறாங்க, இப்போ என் படம் ஒரு ஃபேமிலி படம், அதுக்கு ஈவினிங் ஷோ கொடுக்கணும். ஆனா மார்னிங் ஷோ தர்றாங்க. அப்போ தயாரிப்பாளர்கள் நஷ்டம்தான் அடைவாங்க. நிறைய பேர் படம் எடுக்குறாங்க. இதை மாத்த யாருமே இல்ல. சிறு தயாரிப்பாளர்களைக் காப்பாத்தணும்னு சொல்லி வந்தவங்களும் ஒண்ணும் பண்ணல. இதை மாத்த எல்லாரும் ஒத்துமையா இருந்தாதான் முடியும். 

சேரன்

`இந்தமாதிரி எண்ணமுடையவர்கள் ஒண்ணு சேர்ந்து இதைச் செய்யறாங்களா?’ என்ற கேள்விக்கு, ``அதானே கஷ்டமா இருக்கு. தமிழ்நாட்டுலல இருக்கோம். எல்லாரும் ஒண்ணா சேருறோங்குறத எப்படிப் பேசுறது. இங்க கட்சியே 94 இருக்கு. தயாரிப்பாளர் சங்கத்துல அவ்வளவு பிரிவு இருக்கு. நீங்க, நான் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்கதான் ஒண்ணு சேரமுடியும். அதனால இதை ஒண்ணா நின்னு போராட முடியாது. இதான் வாழ்க்கைனு கடந்துபோக வேண்டியதுதான்.

`இதற்கு ஒரு தீர்வு இருந்தே தீருமே என்ற கேள்விக்கு’ `` எல்லாருக்கும் பொழப்பு இல்லைனு வரும்போதுதான் ஒண்ணுசேருவாங்க அப்போ தீரும்’’ என்றார்.

 

மேலும் இயக்குநர் சேரன் பேசிய விஷயங்களை அறிந்துகொள்ள கீழ்வரும் வீடியோவை... 

 

     


[X] Close

[X] Close